Responsible Teacher Award 2022
On this Special day, 26th March 2022, Responsible Citizens iYakkam ( RCi ) presented RESPONSIBLE TEACHER award to Kubera Pattinam Panchayat Middle School, Head Mistress Smt. G. SARASWATHI through the hands of the District Eduction Officer Mr. Aravindan, Honorary President of Maram Vallapor Sangam, Tiruvannamalai Sri. J. Radha Krishnan & Environmental Coordinator of RCi Sri. S. Sankar Raman.
| Responsible Teacher with her responsible Family & DEEO |
பொறுப்புள்ள ஆசிரியர்களை அங்கரிக்க வேண்டிய அவசியம்:
Need for Recoginizing Responsible Teachers :
விழாவிற்கு வந்திருந்த கல்வித் துறை அதிகாரிகள், கிராம நிர்வாகத்தினர், சமூக ஆர்வலர்கள் , பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை வரவேற்று பேசிய பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் துவக்குனர் திரு. ச. கிருஷ்ண குமார், சமுதாயத்தில் பொறுப்புள்ள ஆசிரியர்களின் பணியை அங்கரிக்க வேண்டிய அவசியத்தை விளக்கி மாணவர்களிடம் " மிகவும் பொறுப்புள்ள உயிரினம் எது ?" என்ற கேள்வியுடன் துவக்கினார். பல மாணவர்கள் தெளிவாக " மரமே மிகப் பொறுப்புள்ள உயிரினம்" பதில் கூறினர்.
Shri S. Krishna Kumar, initiator, Responsible Citizens iYakkam, welcomed the gathering of educationists, parents and students and explained the need for the society to recognize and appreciate the Teachers who take extra efforts in creating a platform for students to understand their environment better .He started with a question to the students " Who is the most Responsible Being? " Interestingly many students answered " Tree is the most responsible Being"
மரங்கள் தனக்காக மட்டும் வாழ்வதில்லை. பல உயிர்களும் மரங்கள் வாழ்வதால் பயனடைகின்றன. அது போலவே பொறுப்புள்ள ஆசிரியர்களும் தமக்காக மட்டும் வாழாமல் மாணவர்களின் வாழக்கைகாக வாழ்பவர்கள் என்றார். குபேரபட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியரை பொறுப்புள்ள ஆசிரியர் விருதுக்கு தேர்தெடுத்த காரணத்தை விளக்கினார்.
He highlighted, Teachers are like trees, are not just living for themselves but for others. He explained the reason for choosing the HM of Kubera Pattinam Panchayat Union Middle School for this award.
குபேரபட்டிபட்டினம் கிராமம் தர்மபுரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைசி கிராமம் ஆகும். இந்த பள்ளியின் மாணவர்கள் பெரும்பான்மையினர் "மலை குறவர்" என்றறியப்படும் பிரிவை சேர்ந்த மலை வாழ் மக்கள் வகையினர். இந்த பள்ளிக்கு நேரடியாக வந்து செல்ல போதுமான பேரூந்து வசதிகள் இல்லாத சூழ்நிலையிலும் இங்கு படிக்கும் மாணவர்களின் அறிவியல் ஞானத்தை வளர்க்க, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி சர். சி.வி. ராமன் அவர்கள் " ராமன் விளைவுகள்" என்ற கோட்பாடை கண்டுபிடித்த தினமான 28 பிப்ரவரியில் வருடா வருடம் கடந்த 11 வருடங்களாக " அறிவியல் கண்காட்சி" யை தலைமை ஆசிரியர் நடத்தி வருவது மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் அவரின் பொறுப்புணர்ச்சியை காட்டுகிறது. அதுவும் இந்த கண்காட்சிக்கான செலவுகளை அரசாங்கத்தை எதிர்பாராமல் சொந்த செலவில் பிற ஆசிரியர்கள் உதவியுடன் செய்து வருவது மிகவும் "பொறுப்பான" செயலாக பொ.கு.இயக்கம் கருதுகிறது.
ஒரு சமுதாயம் பொறுப்புள்ள சமுதாயமாக மாற அதன் குடிமக்கள் பொறுப்புள்ளவர்களாக மாற வேண்டும். அதற்கான சூழ்நிலையை உருவாக்குபவர்களை நாம் பொறுப்புள்ள செயற்பாட்டாளர் ஆக பார்க்கிறோம். இத்தகைய ஆசிரியர்கள் மூலமாகவே பல பொறுப்புள்ள மாணவர்கள் உருவாகி பொறுப்புள்ள சமுதாயமாக விரிவடைகிறது.
The school being the last village of Tiruvannamalai District bordering Dharmapuri District and most of the Children are from Tribal community. The HM has been organizing Science Exhibition for the last 11 years in this school despite many adverse situations, least connectivity issues. She has been spending for the events at her own expenses, only for involvement in inculcating scientific concepts in the minds of Children. In comparison to many other schools, where still children are not able to read or write alphabets, this school students are able to explain science concepts in simple language with the great efforts of the Teachers. RCi, believes a society can be responsible only if its citizens becomes responsible and the people make the responsible world. For this fundamental foundation has to be made in the school children level and the teachers are playing great roles in shaping the society.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி கூட ஒரு அறிவியல் விளக்கமளிப்பதை பார்த்து வியந்து பாராட்டினார், பொ.கு. இயக்கத்தின் சூழலியலாளர் திரு. சு. சங்கர ராமன். அவர்கள் மாணவர்களை அப்துல் கலாம் அய்யா வாழ்ந்து காட்டி வழிக் காட்டிய வகையில் "கனவு" காணச் சொன்னார். அப்துல் கலாம் அய்யா போன்று பொறுப்புடன் தேச முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்று மாணவர்களை உறுது மொழி எடுக்கச் செய்தார். சென்னையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே தன் குடும்பத்தினருடன் வந்திருந்த பொ.கு. இ. ஆதரவாளர் திரு. சத்திய நாதன் , அப்துல் கலாம் அய்யாவின் பிறந்த நாள் விழாவின் பேச்சுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு அவர் வாழ்க்கை சரித புத்தகத்தையே பரிசாக அளித்து மகிழ்ந்தார்.
| Melpachar PUM School Smt. Punitha receiving the Certificate of Merit |
![]() |
| Malayanoor Chekkadi Village PUM School HM Shri. Nainar Receiving the Certificate of Merit |
Shri. Sankara Raman gave "Kadamba" Tree saplings as a memento on behalf of RCi to all the dignitaries. Mr. S. Krishna Kumar explained that RCi always gives saplings as mementos and we avoid presenting shawls as trees are full of life and long living and most beneficial to other beings too. He also highlighted the reason for choosing " Kadamba" tree as the school is part of a hilly terrain and as per ancient Tamizh scriptures, Lord of the Hilly regions is Lord Muruga and he is addressed as per this tree as "Kadamba".
செங்கம் வட்டம் , திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரி திரு. அரவிந்தன் அவர்கள் இந்த பள்ளியையும் அதன் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் அவர்கள் நடத்தும் "அறிவியல் கண்காட்சி"யை திறந்து வைத்து அவர்களின் பங்களிப்பை பாராட்டி தன் உரை நிகத்தினார். மாணவர்கள் சுற்றுச் சுழ்லை பாதுகாப்பதில் பெரும் பங்காற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
District Education Officer- Chengam Block Shri. Aravindan gave his presidential address appreciating the school and the HM for their enthusiasm in bringing science closer to children by organizing Science Exhibition year after year in Kubera Patnam School. He emphasized students should become more environmental conscious and be closer to the Nature.ஆசிரியர் ஊக்கத்தினால் தன் வாழ்க்கையில் முன்னேறியுள்ளதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார் இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் திரு. ஜெயபால். "அறிவியல் கண்காட்சி" முதாலாம் ஆண்டில் தாங்கள் கற்றது இன்று தான் கணிணி துறை வல்லுனராக இருப்பதற்கு எப்படி உந்துதலாக இருந்தது என்று இன்றைய மாணவர்களுக்கு விளக்கினார்.
One Old student, alumni of this school, Shri. Jayapal, who was the 1st batch of the 1st ever science exhibition of the school, spoke about how he was benefited by the continuous guidance of the HM in developing his career and now successfully establishing himself as a IT Professional.மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பசுமை படைகளை செயல்படுத்தி இந்த கோடை விடுமுறைக்கு முன் விதை பந்துகள் செய்து தருமாறு பொ.கு. இயக்கம் மாவட்ட கல்வி அலுவலரிடம் விண்ணபித்தது.
Responsible Citizens iYakkam requested the DEEO to establish Green Corps team in every school and make seed balls before their oncoming summer vacation.
தலைமை ஆசிரியர் திருமதி . சரஸ்வதி அனைவருக்கும் இந்த விருதுக்காக நன்றி தெரிவித்தார். வந்திருந்த விருந்தினர் அனைவருக்கும் புத்தகங்கள் நினைவு பரிசாக வழ்ங்கினார்.
HM gave her acceptance speech and gave books as memento to every guest and Thanked the District Educational administration, Village panchayat Administration and RCi for conferring the award on her and thanked all her colleagues , who gave her unstinting support in educating the children in innovative manner.
சமுதாயத்தில் ஒவ்வொரு துறையிலும் பொறுப்புடன் செயல்படும் பல துறை வல்லுனர்களையும் அவர்களின் பொறுப்பான செயல்களால் ஒரு பொறுப்புள்ள சமுதாயம் உருவாவதை அங்கிகரிக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் விழைகிறது.
RCi wishes to develop our society in recognizing many self initiated Teachers and other professionals in their respective field to bring a fresh wave of change, inculcate positivity in the air and make a Responsible Society in every sphere of life.
இந்த நிகழ்வை ஆரோக்கியமாக கொண்டாடும் விதமாக மாவட்ட கல்வி அதிகாரியின் கரங்களால் ஒரு அரச மரக் கன்றை நடுவதற்கு பொ.கு. இயக்கம் ரெட்டியார்பாளையம் கிராமத்தின் ஆர்வலர் திரு. சிலம்பரசன் உதவினார்.
To commemorate the event, DEEO Shri. Arvanidan planted a Arasa (Peepul )Sapling & Shri. Silambarasan of RCi Volunteer from Reddiarpalayam Village assisted him within the school premises.வந்திருந்த அனைவரும் அறிவியல் கண்காட்சியை கண்டு மாணவர்களின் ஈடுபாடையும் அறிவாற்றலையும் பாராடி சென்றனர்.
கண்காட்சியின் சில படங்களை கிழே உள்ள காணொளியில் காணலாம்.
All the visitors then visited the Science Exhibition and listened to the young minds explaining the scientific concepts in their childhood enthusiasm. Some of the photos of the science exhibition are in the above video.


Great event. Heartfelt appreciation for conducting such a thoughtful event and Great honor to the teacher. Science exhibition is awesome 👌
ReplyDeleteGreat work..Feels awesome to see great work
ReplyDeleteThank you for the appreciation
DeleteGreat brother. My heartfelt congratulations on giving many more awards to the responsible persons.💐💐🎉🎉🎊🎊👏🏼👏🏼👏🏼👏🏼👍🏻👍🏻
ReplyDeleteThank you for the valuable comments
DeleteIs commendable work.
ReplyDeleteThank you
Delete