Hill Fires complaint and Response from Director Environment
மலைகளுக்கு தீ பற்றிய புகாரும்
சுற்று சூழல் இயக்குனரின் பதிலும்
Responsible Citizens iYakkam submitted our petition to draw the attention of the Environment Secretary & Director -Environment & Climate change & has received response from the Director. They have also forwarded it to DFOs of Namakkal Division, Salem Division, Dharampuri Division, Tiruvannamalai South Division & Krishna Giri Division.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் பல குன்றுகளிலும் மனிதர்களால் செயற்கையாக மூட்டப்பட்ட தீ குறித்த பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக அளித்த மனுவிற்கு சுற்றுப்புற சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இயக்குனரிடமிருந்து பதில் வந்துள்ளது. அவரின் கடிதத்தை நாமக்கல் , சேலம் ,தருமபுரி , திருவண்ணாமலை தெற்கு , மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர்களுக்கு நமது புகாரை மேல் நடவடிக்கை எடுக்க அனுப்பியுள்ளார்கள்.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் மனுவின் சாராம்சம் Responsible Citizens iYakkam Petitions' summary is below :
We are really concerned and wish to bring to your kind notice about human inflicted fires on the hills of the eastern ghats passing through Tamil Nadu.
மனிதர்களால் ஏற்படும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் காட்டுத் தீ குறித்து மிகுந்த அக்கறையுடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
Eastern ghats' southern end which originates in Namakkal District runs through Salem, Dharmapuri, Krishnagiri, Tiruvannamalai, Tirupattur, Vellore and Ranipet districts of TN.
கிழக்கு தொடர்ச்சி மலைகளின் தெற்கு முனை நாமக்கல்லில் ஆரம்பித்து சேலம்,தருமபுரி ,கிருஷ்ணகிரி ,திருவண்ணாமலை ,திருப்பத்தூர் ,வேலூர் ,ராணிப்பேட்டை மாவட்டம் வரை நீண்டுள்ளது.
Every year from February to June many hills catch fires and total flora and fauna get affected year after year. It is important to note that most hill fires are man caused only due to personal selfish gains destroying already dwindling forest cover in TN.
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி முதல் ஜூன் வருடாவருடம் பல மலைகளில் இருக்கும் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களால் வைக்கப்படும் தீயினால் அழிந்து வருகின்ற காடுகளால் சிலரின் குறுகிய எண்ண செயல்களால் ஏற்கனவே மிகவும் குறைவாக உள்ள காடுகளின் அடர்த்தி மேலும் குறைந்து வருகிறது .
While the Govt is making no of policies to increase the green cover, it is imperative the existing green cover is preserved to increase the green cover in Totality.
மாநிலத்தின் பசுமையை வளர்க்க அரசாங்கம் எத்தனையோ திட்டங்களை தீட்டினாலும் ,ஏற்கனவே இருக்கும் வனப் பகுதிகளை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் .
The reasons for inflicting fires on the hills :
மலைகளில் தீ வைக்கும் காரணங்கள் :
1. It is a belief among cattle rearers that only if the grasses are burnt every year, grasses will grow well for their cattles to grow well.
காடுகளில் புற்களுக்கு வருடா வருடம் தீ வைத்தால் தான் அவை நன்றாக வளரும் என்று ஆடு மாடு மேய்ப்பவர்கள் நம்புகிறார்கள்.
2. For poaching wild animals by setting fire - the wild animals get stranded in a vulnerable spots for the poachers to catch the prey easily.
வன விலங்குகளை வேட்டையாட காட்டுக்கு தீ வைத்தால் மிருகங்களால் ஓட முடியாமல் எளிமையாக பிடித்து விடலாம் என்று வேட்டைக்காரர்கள் நம்புகிறார்கள்.
3, Inebriated drunk rural folks throw used liquor bottles on the hills and bottles act as lenses for the sun's rays to ignite fire. Though it may look like natural fire, the root cause is because of the glass bottles strewn on the hills.
தமிழ்நாட்டின் பெரு நோயாக இருக்கும் மது குடிப்பவர்கள் தாங்கள் குடித்துவிட்டு உடைத்து தூக்கி எரியும் காலி பாட்டில்கள் லென்சுகளாக செயல்பட்டு காட்டு தீ செயற்கையாக உருவாக காரணியாகிறது.
Preventive & stringent actions needed :
முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தேவை
1. Total ban for grazing of cows, goats and other domesticated animals in forest area as no new tree saplings can grow in the forest as the little ones growing from seeds every year are grazed by domestic animals. So no new trees are adding up in the hills and reserved forests. Force manning the forests are well aware of the grazing and allowing the green reduction.
மலைகளிலும் , காப்பு காடுகளிலும் வன விலங்குகள் தவிர வேறெந்த வளர்ப்பு மிருகங்களை மேய்சசலுக்கு அனுமதிக்க கூடாது . ஆடு மாடுகள் காடுகளில் வளரக் கூடிய சிறு செடிகளை கூட விட்டு வைப்பதில்லை. இதனால் புதியதாக செடிகள் வளர்வதற்கு வாய்ப்பில்லை . இதனை பாதுகாக்க வேண்டியவர்களும் இந்த மேய்சசல் விவரங்கள் தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.
2. Severe action against poachers. Deer meat is available openly in villages around the hills. Small foxes are getting killed indiscriminately which keeps the check on the herbivores population and helps forest rejuvenation. Even pythons are getting killed for skin as they are killing the goats in some villages adjacent to forests. Same is the case with wild cats, boars etc.... Only if the forester's eyes are severely shut, they cannot see the meat sales in many villages.
மான்களின் மாமிசம் பல மலை கிராமங்களிலும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளிலும் எளிமையாக கிடைக்கிறது. தாவர உண்ணிகள் எண்ணிக்கைகளை கட்டுக்குள் வைக்க உதவும் குள்ள நரிகளையும் வேட்டையாடிவிடுகின்றனர். மலைப்பாம்புகளை கூட அவைகளின் தோல்களுக்காகவும் அவைகள் ஆடுகள் பிடிக்கின்றன என்பதற்காக கொல்லப்படுகின்றன. இதே போல் தான் காட்டுப் பூனைகள் , காட்டுப் பன்றிகள் விவகாரத்திலும் நடக்கின்றன . இவைகள் அனைத்தும் வனத்துறையினர் சிறப்பு கவனம் செலுத்தினால் தடுக்க முடியும் .
3. Local villagers youth to be involved in greening the hill forests and they must be made part of greening activities to ensure that they are part of protection activities as the future generations are very open to greening and taking responsibility for their green future. Village forest committee should allow mainly youngsters to be part of the team. At present most of the village forest committee are only part of political outfits without any actual role playing in greening the future.
கிராமத்து இளைஞர்களை மலைகளை பசுமையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் . எதிர்கால சந்ததியினர் பசுமை வளர்ப்பதில் மிக ஆர்வமாக உள்ளனர். கிராமங்களில் வன பாதுகாப்பு குழுக்களில் இளைஞர்களை இணைக்க வேண்டும்.
4. Awareness meetings in schools and colleges in and around the hills and forming forest protection teams in each village.
மலைகளை சுற்றியுள்ள கிராமங்களின் பள்ள மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் மலைகளை காடுகளையும் பாதுகாப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .காடுகளை பாதுகாக்கும் குழுக்களை அமைக்க வேண்டும்.
5. Screening the forest areas without leaking the movement of forces to poachers to increase the wildlife population which helps in forest and river rejuvenation.
காடுகளையும் மலைகளைகளையும் அதில் வேட்டையாடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து காட்டின் அடர்த்தியையும் ஆறுகள் மீட்டு உருவாக்கத்திற்கு வழி வகுக்க வேண்டும் .
6. Wildlife and Tree Population census to be carried out in every hill forest and documentary evidence and marking of the trees to ensure adequate growth of density of trees & animals population in hills.
வனங்களில் வாழும் உயிரினங்கள் மரங்களின் எண்ணிக்கையை கணக்கு எடுத்து அவற்றின் வகைகளை பதிந்து வனங்களில் மரங்களின் விலங்குகளின் எண்ணிக்கையை கூடுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் .
We are also enclosing the pictures of hill fires at Parvatha malai in April 2022 and Malai manjanur Hill in March 2022 in Tiruvannamalai district for your ready reference and suitable action. Please note these hills are getting burnt year after year.
நாங்கள் இந்த கடிதத்துடன் கடந்த ஏப்ரலில் பருவத மலையிலும் மார்ச் மாதத்தில் மலைமஞ்சசனூர் மலையிலும் தீயினால் ஏற்பட்ட பாதிப்புகளை இணைத்துள்ளோம்.
Responsible Citizens iYakkam is working to bring livelihoods to the rural population by setting up plant nurseries in foot hill villages and encouraging youngsters to take up responsibility in greening their future..
மலை அடிவார கிராமங்கள் ஒவ்வொன்றிலும் கிராம மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த மரம் செடிகளுக்கான பண்ணைகளை உருவாக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது .
( to see the pictures of hill fire click this link https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2022/03/save-trees-on-hill.html மலைகளில் தீ பற்றிய படங்களை பார்க்க இந்த பதிவை பாருங்கள் )



Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society