Every Green Hill is a Vishnu பச்சை மாமலை போல் மேனி

 பச்சை மாமலை போல் மேனி

என்று தொண்டரடி பொடி ஆழ்வார் பெருமாளின் திருமேனி பச்சை மா மலை போல் இருந்ததாக பாடியுள்ளார்.

A Famous hymn recited by an Azhwar describes the Lord Vishnu has his body like a Green Mountain.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலைமஞ்சனூரில் மலையின் அடிவாரத்தில் ஆதி கேசவ பெருமாள் கோவில் உள்ளது. மலை ஏறும் வழியில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 

The Malaimanjanur Hills in Tiruvannamalai District , Tamil Nadu has one temple at the foot Hills, Adi Kesava Perumal Temple and One Srinivasa Perumal Temple on the climbing path is under construction.

27-11-2022 அன்றும் மலைமஞ்சனூர் மலையின் மீது இரண்டாவது கட்டமாக பூவரசு கன்றுகளை மலை மேல் வைத்துவிட்டு வந்தோம்.

On 27th Nov 2022 we went to plant hill on Malamanjanur hill for the 2nd time this year.

இந்த முறை நமது பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் மலை, மரம் , மழை அச்சடித்த டீ-சர்டுகளை பசுமை ஆர்வலர்களுக்கு வழங்கி அதனை அணிந்து கொண்டு பசுமை பணி செய்த காட்சிகள் சில : 

This time we gave Green T shirts to the Tree volunteers with our slogan Rain, River, Responsibility, Rejuvenation Printed on it.





மலையின் உச்சியில் மரங்கள் நடும் போது ஆழ்வாரின் மேற்கொண்ட பாசுரத்தை விளக்கி இந்த மலைதான் உண்மையான பெருமாள். இந்த மலையையே பெருமாளாக பாவித்து சிறப்பாக பராமரித்தால் இந்த ஊருக்கு பெருமாளின் நேரடி அருள் கிட்டும் அதன் மூலம் நீர் வளம் பெருகி ஊரே வளமாகிவிடும் என்று விளக்கினோம். அதற்கு வருடாவருடம் மலைக்கு தீ மூட்டும் வேலையை மட்டும் ஊர்காரர்கள் தடுத்து நிறுத்திவிட்டால் இந்த மலை மிகவும் பசுமையாகிவிடும். அப்போது இந்த பச்சை மாமலை இலட்சுமி கடாட்சமாக மழை பெய்வித்து ஊர் மக்கள் அனைவரும் செழுமையாய் வாழ்வார்கள் என்று நமது பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக மரப் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்ட அனைவரையும் வாழ்த்தினோம்.


While Planting the trees , we explained the hymn of the Azhwar, where this village is blessed by the Lord as he has taken the form of a Hill and it is essential that villagers take care of this Perumal very well by planting trees and protecting and preventing fire being set on the hill every year. If this hill becomes fully dense forests, rainfall will be regular and village will get sufficient inflow in the wells. Village will be prosperous with abundant water.

மலையின் உச்சியில் பெருமாளின் பாத அடி பாறையில் இருப்பதாக  அய்யா திரு. சரவணன் தெரிவித்தார். திரு.வினோத், திரு. செல்வ குமார், திரு சூர்ய மூர்த்தி மற்றும் திரு. மணிகண்டன் ஆகியோர் சபரி மலைக்கு ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளதால் விரதமாகவே மலை ஏறி மரங்கள் நடுவதில் பங்கு கொண்டனர். அதிலும் திரு. மணிகண்டன் சுவாமி இருமுடி தூக்கி சபரிமலை ஏறுவது போல இங்கு பூவரசு கன்றுகளை இருமுடியாக தூக்கி மர வனம் அமைத்து அய்யப்பனின் தரிசனம் கண்டார். திரு. பச்சையப்பன் என்ற இளைஞர் தன் பெயருக்கு ஏற்ப தன் நண்பர் திரு. குமாருடன் வந்து மலை உச்சிக்கு மரக் கன்றுகளை தூக்கி கொண்டு வந்து நடுவதற்கு உதவினார்.

Mr. Saravanan explained a foot print of the Lord is seen on top of the Hill. This time many of our volunteers have become swami ayyappa as they started wearing mala for the sabari malai Pilgirimage. One of the ayyappa swamis, Mr. Manikanta carried the tree saplings on himself climbing the hill as they normally do for climbing the sabrari mala with offerings. Mr. Pachai appan and Mr. Kumar also supported him.


விரைவில் மலையை பாதுகாக்க பல யோசனைகளை அலசி மலையில் பசுமையை வளர்க்க பாதுகாக்க பசுமை படை அமைக்க உறுதி பூண்டோம். 

We discussed various options to protect the hills and our green army shall protect the hill with its sanctity. 

Visualisation of Tirumala Tirupati Hills as Lord Vishnu.

திருமலை திருப்பதி மலையே மகாவிஷ்ணூவின் உருவத்துடன் ஒத்து போகும் ஒரு படம்.


பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் ஒவ்வொரு குடிமக்களும் ஒவ்வொரு மலையையும் கடவுளாகவே வணங்கி அதில் அடர் வனங்கள் வளர்த்து மழை மேகங்களை ஈர்த்து ஆறுகளை ஓட வைத்து மீண்டும் அனைவரும் வளத்தோடு வாழ வேண்டும் என்பதே நமது இயக்கத்தின் குறிக்கோள். இயற்கை வழிபாடே முழுமையான இறை வழிபாடு என்பதனை உணர்வோம்.

Responsible Citizens iYakkam wishes every citizen worship the hills as their Lord and ensure dense forests are protected to attract rain clouds to get copious rain and perennial river to ensure peaceful co-existence of every being on Earth. Worship thy Nature.

Responsible Citizens iyakkam Nov 2022
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் நவ 2022




Comments

  1. What an amazing work are you doing! Surely Vishnu will bless you with his green hands.

    ReplyDelete
    Replies
    1. It is essential everyone realise that Nature is the visible God and worship and conserve it.

      Delete
  2. Kudos to you and all the volunteers involved in the mission. I hope that a variety of trees ( timber, fruit, ornamental) indigenous to the area are being planted . This way the biodiversity can be preserved.

    ReplyDelete
    Replies
    1. poovarasu is chosen as it is growing fast and we can easily multiply it by cutting branches and keeping it as pothu trees. All the trees we are planting are for birds to nest on them. Birds will take care of bio diversity once they flock the hills.

      Delete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students