Van Ki baat வன் கீ பாத் AIR Tamil FM Interview on 5 Jul 2023 மரத்தின் குரல் வானொலியில்



Van ki baat
மரத்தின் குரல்


 அனைத்து இந்திய வானொலியின் விவித பாரதியின் 102.3 பண்பலையில் "வன மஹோத்ஸவ்" வார கொண்டாடத்தில் "வனங்களை வளர்ப்பதில் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் பங்களிப்பை பற்றி பேச நிகழ்ச்சி ஓருங்கிணைப்பாளர் திருமதி. செண்பக காசி அழைத்திருந்தார். 5.7.2023ல் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நமது மரங்களுடனான அனுபவத்தை மிக சுவாரசியமான உரையாடலாக வழங்கினார். 

எங்களது உரையாடல் "அடையாறுக்கும் கூவாறுக்கும் இடையில் இருக்கும் ஏ ஐ ஆறில் " (AIR -All India Radio ) ஆரம்பித்து உலகத்தின் அனைத்து ஆறுகளை பற்றியும், அவை உற்பத்தியாகும் மலைகள் பற்றியும் , நதிகள் வழங்கும் வளங்களினால் நாகரீகங்களின் வளர்ச்சி, நகரங்களின் வளர்ச்சியை இவை அனைத்தும் "வனங்களின் கொடை" என்பதை பற்றி விளக்கினோம். 

    வனங்களின் கொடை மழை

மழைகளின் ஓட்டம் ஓடை

ஓடைகளின் சங்கமம் நதி

நதிக்கரையில் பிறப்பது நாகரீகம்

நாகரீகத்தின் வெளிப்பாடு கலைகள்

அதனாலேயே நாங்கள் வனம் வளர்க்கும் கலை கற்கிறோம்


மலைகள் தோறும் மரங்கள் திட்டத்தின் விபரங்கள், ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வரை வனங்களை உருவாக்க கூடிய எளிய பயிற்சிகள், கிராமங்களில் வாழ்வாதாரம், நகரமயமாக்கலின் விபரீதம் ஆகியவற்றை விளக்கினோம்.


இதனை பல நேயர்கள் வாட்சப், பேஸ் புக், தொலை பேசி மற்றும் பல சமூக ஊடகங்கள் மூலமாக கேள்விகள் கேட்டு , கருத்துக்களை பரிமாறியும் உற்சாகப்படுத்தினர். 

திருமதி செண்பகா காசி இந்த துறையில் பல்லாண்டு காலம் அனுபவத்தில் மிக நேர்த்தியாக உரையாடுபவர்களை அவர்கள் இயல்பாகவே பேச வைக்கும் கலையில் மிக தேர்ந்தவராக இருக்கிறார். அந்த ரெக்கார்டிங் அறையில் பல செயல்களை செய்து கொண்டே , நடு நடுவே செய்திகள், பேசும் தலைபிற்கு ஏற்ற பாடல்கள், பேசும் வாசகர்களுடன் பேசிக் கொண்டே நம்முடனும் தலைப்பின் தொடர்ச்சியை விடாமல் பேசி மலைக்க வைக்கிறார் இந்த பன்முக திறமைக் கொண்ட தமிழ் ஆர்வலர் மற்றும் ஊடகவியலாளர். 


இந்த இரண்டு மணி நேர வனங்கள் நம் வாழ்வை வளமாக்கும் பற்றிய உரைடயாடலின் தொகுப்பு நமது பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் YouTube RCi YouTube Channelசேனலில்  வெளியிடப்பட்டுள்ளது. கேட்டு கருத்துக்களை பகிருங்கள்.

link : https://music.youtube.com/browse/VLPLNpf6f977FHCXfFnSMg4HNcLF9VTdhjFc

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2023
Responsible Citizens iYakkam 2023 


Comments

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society