Tree on the Rock is the Guru கல் ஆலமரமே குரு
In the Saiva Siddhanta , Lord Siva is worshipped as the Guru Dakshina Murthy. The Guru is depicted as a Human face carved out of a Tree. This is to show the importance of the tree as a source of wisdom, as Trees are constantly in sync with universe and all the ancient sages did their penance under the trees to acquire the universal wisdom available in abundance under the trees. In this picture below, four sages are seated near to their Guru on either side and the philosophy says that the four acquired their knowledge without even uttering a single word with the Guru, which eventually means the GURU is the tree.சைவ சித்தாந்தத்தில் சிவ பெருமானை குரு தட்சிணாமூர்த்தியாக வழிபடுகிறார்கள். இந்த குரு மரத்திலிருந்து வெளிப்படுவது போலவே காட்சிபடுத்தி இருப்பார்கள். இந்த கல் ஆல மரத்தின் காலடியில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் அந்த குருவுடன் ஒரு சொல் கூட பேசாமல் ஞானம் பெற்றதாக சைவத்தில் விபரங்கள் தெரிவிக்கின்றன. இது மரங்களின் அதுவும் குறிப்பாக கல் ஆல மரத்தின் ( கல்லின் மீது எந்த தண்ணீரும் இல்லாமல் நெகிழ கூடிய மண்ணும் இல்லாமல் வளரும் அதிசய மரம் கல் ஆல மரம் ) பிரபஞ்சத்திலிருந்து ஞானம் பெறும் வழியாக உருவகப்படுத்தி இருக்கிறார்கள் .இதனாலேயே பண்டைய காலத்தில் எல்லா முனிவர்களும் காட்டினில் மரத்தினடியில் அமர்ந்து தவம் செய்வதாகவே பல புராணங்களும் தெரிவிக்கின்றன. இது மரங்கள் வாழ் நாள் முழுவதும் எப்போதும் பிரபஞ்சத்துடன் தொடர்பிலேயே இருப்பதால், தருவினடி அமர்ந்தால் பிரபஞ்சத்தின் அனைத்து அறிவையும் பெறலாம் என்பதை உணர்த்தவே. மரமே குரு.
Prince Siddhartha acquired knowledge by sitting under the Bodhi Tree and eventually he got the name Buddha from the tree's name only, meaning the expansion Gautama experienced from the expansive nature of the universe just by sitting under his GURU, which was a Taru ( Tree in Tamizh and Sanskrit ). Prince Siddhartha had a kingdom with boundaries whereas Gautam Buddha became a emperor of the Kingdom without boundaries. Even in history lessons, first thing , we recollect about King Ashoka is he planted trees on the roads. The same King before meeting Buddha, had butchered several million lives in the Kalinga war. After he realized the inner expansion he experienced from Buddha, King Ashoka started planting trees.
இளவரசர் சித்தார்தன் போதி மரத்தின் அடியில் அமர்ந்து ஞானம் பெற்றதாலேயே அந்த மரத்தின் பெயராலேயே பௌத்த என்ற பெயர் பெற்றார். மரங்களின் விரிவு தன்மையை உணர்ந்தாலேயே அவர் தன்னுள் விரிந்தார். அவர் அந்த மரத்தையே தனது குருவாக ஏற்றார். இளவரசன் சித்தார்தனுக்கு எல்லைகளுடன் கூடிய ஒரு ராஜ்ஜியமே இருந்தது ஆனால் அவரே விரிந்த மனம் கொண்ட பின் கௌதம் புத்தர் எல்லையில்லா ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியானார். நாம் இன்றும் மாமன்னர் அசோகரை பற்றி பாடத்தில் படிக்கும் போது அவர் சாலைகள் தோறும் மரங்கள் நட்டார் என்றே படிக்கிறோம். ஆனால் அதே அசோகர் புத்தரை பார்பதற்கு முன்னர் கலிங்க போரில் பல இலட்சம் பேரை கொன்று பல நாடுகளை அடிமைபடுத்தியவர். புத்தரிடமிருந்து மன விரிவடைதலை உணர்ந்த பின் அவர் மரங்கள் நடுவதையே தனது அரசின் தலையாய கடமையாக கொண்டார்.
Trees planting is not just for rains or shade. More the trees, More the righteousness and more the wisdom says Saint Vallalar. All the injustices we are facing in the society are due to the reduction in the tree density cover. That is the root cause for the anomalies. On this day & night of Guru Purnima let us responsibly start increasing the numbers of our Gurus ( Trees ) to show us the righteous path.
மரங்கள் நடுவது வெறும் மழைக்கோ அல்லது நிழலுக்கோ மட்டும் அல்ல. மரங்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க தரும சிந்தனைகள், செயல்கள் மேலோங்கும் தருமம் தழைக்கும் என்கிறார் தெய்வ அருட்பிரகாச வள்ளலார்.
அவர் இதனை அவர் இயற்றிய தெய்வமணிமாலை செய்யுளில் "தரு ஓங்கு சென்னையில்" தருவாகிய மரங்களின் அடர்த்தியினால் அவைகள் வாழும் தலம் ஓங்கும் என்கிறார். நாம் இன்று உணறும் அனைத்து தரும குறைபாடுகளுக்கும் தருக்களின் அடர் எண்ணிக்கை குறைபாடே மூலக் காரணமாகும். அதனால் இன்றைய குரு பௌர்ணமி நன்னாளில் நமது குருக்களின் ( தருக்களின் ) எண்ணிக்கையை அதிகரிக்க முயல்வோம் பொறுப்புடன்.
![]() |
| Righteousness is directly proportional to No of Trees |


வள்ளலார் சிந்தனை வளர, தரு வளரட்டும், தருமம் செழிக்கட்டும்
ReplyDeleteTree increases righteousness
Delete