பழ மரங்கள் நடுதலே சிறந்த அன்னதானம் Fruit Trees Planting is the Real Annadhanam

 




Vallalar 200th Year of appearance



இது மாய வித்தையில்லை. விஞ்ஞானிகளாலும் ஓப்புக் கொள்ளப்பட்ட அறிவியல், ஒளியிலிருந்து தான் இந்த உலகமே உருவானது என்பது. அதனால் உருவம் எதில் இருந்து வந்ததோ மீண்டும் அதே ஓளியாக முடியும் என்பதே. 

ஒளி உடம்பை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வள்ளல் பெருமகனார் விளக்கியுள்ளார். ஒளி உடம்பை அடைய மிக எளிமையான வழியாக "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்ற வாழ் நெறியில் வாழ்ந்து காட்டினார். அதன் வெளிப்பாடே "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பயிருக்கு தேவையான தண்ணீர், அதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். 

தெய்வமணிமாலை என்ற அருட்பாடலில் சென்னையில் உள்ள கந்தகோட்டத்தில் உள்ள முருகனை போற்றி பாடியுள்ள பாடலில் "தரு ஓங்கு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே " என்ற பாடி "தருமமிகு சென்னை" என்றும் குறிப்பிடுகிறார்.

இதில் அவர் நாம் அனைவருக்கும் மிக எளிமையான ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நாமும் கடைபிடிக்க " தரு ஓங்கு" என்று மரம் வளர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

மேலும் வள்ளலார் "அன்னதான"த்தின் அவசியத்தை பல அன்ன தரும சாலைகளை உருவாக்கி மனிதர்களின் உணவு வழங்குதலை முன்னணி கடமை ஆக்கினார். 

இதை ஓட்டியே மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் "தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றார்.
அடுத்து வள்ளலாரை விளக்க 
"காக்கை குருவி எங்கள் ஜாதி" என்றார்.


வள்ளலாரும் பாரதியாரும் பாடிய காலகட்டம் ஆங்கிலேய அரசு இந்தியர்களின் உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு கடத்திக் கொண்டு போய் பல இந்தியர்களையும் பசிப்பிணியில் வாட்டியது. அதனால் அன்று பலருக்கும் அன்னதானம் சத்திரங்களின் அவசியம் இருந்தது.

ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அன்னதானம் என்ற பெயரில் "பிரியாணி" போன்ற உணவுகளை உணவுக்கு வழி இருப்பவர்களுக்கே கொடுத்து உணவை வீணடிப்பது நடக்கிறது. 


தமிழ்நாட்டிலிருந்து தெற்கிழக்கு ஆசியா வரை ஆண்ட மாமன்னன் இராஜ இராஜ சோழன் தன் பெரிய கப்பல் படையினருக்கும் உணவளித்தது "சோழ பெருவள நாடு" என்ற போற்றப்பட காரணமாக இருந்தது "காவிரி" என்ற "பொன்னி" ஆறு தந்த வளம் தான். 


அதனால் "அன்னதானம்" செய்யக் கூட ஆறுகள் வளம் கொடுத்தால் மட்டுமே சாத்தியம். இன்றைய அவசிய அவசர தேவை "மலைகள் தோறும் மரங்கள்" நட்டு மேகங்களை ஆறுகளாக மாற்ற வேண்டும். இன்று பல மலைகளும் "மொட்டை" மலைகள் ஆகி வருகின்றன. 


சம வெளியில் வாழும் மக்களும் தாங்கள் சாப்பிடும் பழங்களின் கொட்டைகளையும் மரக் கன்றுகளாக மாற்றி காடுகளில், மலைகளில் பழ மரங்கள் வளர, காட்டு விலங்குகளுக்கு பழமரங்கள் மூலம் "அன்னதானம்" செய்து  பொறுப்புள்ள குடிமக்களாக தங்கள் கடமை ஆற்ற வேண்டும்.

இதன் மூலமே வள்ளலாக ஆறுகளை ஓடச் செய்து நாம் அனைவரும் "வள்ளலாரை" "வள்ளல் ஆறு"களில் உணர்வோம்.

உங்களால் வளர்த்து நடப்படும் ஒவ்வொரு பழ மரமும் வருடா வருடம் பழங்களை வழங்கி உங்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும். நீங்களும் வள்ளலார் ஆகலாம்.

அருட் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை அருட் பெருஞ்ஜோதி

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் அக் 2023
Responsible Citizens iYakkam Oct 2023







Comments

  1. அருட் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை அருட் பெருஞ்ஜோதி 🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society