விதை பந்து விதைத்தல் மலைமஞ்சனூர் 10 நவம்பர் 2019

 மலைகள் தோறும் மரங்கள் திட்டம்

விதை பந்து விதைத்தல் மலைமஞ்சனூர் 
10 நவம்பர் 2019

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் இருக்கும் மலைமஞ்சனூர் கிராமத்தில் உள்ள மலையில் உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பில் 3500 விதை பந்துகள் மலை மீது தூவுவதல் மற்றும் மண் கண்டம் வாட்டம் இருக்கும் இடங்களில் நடப்பட்டது.


தண்டராம்பட்டு வட்டத்திலேயே மரங்களே இன்றி அதிகம் பாறைகளுடன் வெறும் புற்களாகவே காட்ட்சியளிக்கும் ஒரு மலை.

அதுவும் வருடாவருடம் இங்கும் வளரும் மஞ்சம் பில்லை பறிப்பதற்காக இந்த மலையில் தீ மூட்டி மலையில் இயற்கையாகவே வளரக்கூடிய மரங்களை கூட தீயினால் எரிந்து வாடிவிடுகின்றன. இதனாலேயே இந்த மலையை பசுமையாக்குவதே ஒரு சவாலாக ஏற்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் களமிறங்கியது. 

இதற்காக உள்ளூர் மக்கள் பலரை தொடர்பு கொண்டு மலையின் மீது மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியத்தை பலருக்கும் எடுத்துரைத்தோம்.  இதில் இளம் விவசாயி திரு. செல்வ குமார் மற்றும் அவரின் நண்பர்கள் அவர்கள் ஊரில் இருக்கும் இயற்கை கொடுத்த வரமான மலையை பயன்படுத்தி அதில் மரங்கள் நட்டு மழையை பெருக்குவதில் ஆர்வம் காட்டினர். 

எங்களது இந்த முயற்சிக்கு 6ம் வகுப்பு மாணவன் முனியன், சுபாஷ்,  தேவேந்திரன், அசோக்,  அன்பரசன் முதற் கொண்டு அனுபவமிக்க விவிசாயிகள் உட்பட பல வயதினரும் களமிறங்கினர். 

மலையின் மேலே இருக்கும் உச்சி பாறை வரை சென்று இண்டு இடுக்கு விடாமல் விதை பந்துகளை பல குழுக்களாக பிரிந்து சென்று தூவினர்.
எந்த இடத்தில் மண் கண்டம் அதிகம் இருந்தாலும் அங்கே விதை பந்துகளை விதைத்தும் வந்தனர். 
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தில் ஒவ்வொரு மலையிலும் விதை பந்துகள், மரக் கன்றுகள், போத்து மரங்கள் நடுவதற்கு நாங்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களையே ஈடுபடுத்து வருகிறோம். மலைகளில் பசுமை மிகுந்த பின் அதனால் கிடைக்கும் நன்மைகள் முதலில் அந்தந்த உள்ளூர் மக்களையே சென்றைடையும். அதனால் இது நமது மலை, நமது மரங்கள் இதனை நாம் தான் பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியை மக்கள் மனதில் விதைப்பதே நமது முக்கியமான பணியாக இயக்கம் செய்து வருகிறது.  பொறுப்புள்ள மக்களால் தான் பொறுப்புள்ள சமுதாயம், பொறுப்புள்ள அரசாங்கம் உருவாகிறது.

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் அடையாளமாக ஒரு மரத்தைதான் இயக்கம் தேர்ந்தெடுத்துள்ளது. மரமே மிகப் பொறுப்புள்ள உயிரினம். 
மரங்கள் தங்களுக்காக மட்டும் வாழாமல் மற்ற பல வகை உயிரினங்கள் வாழ வழிச் செய்கிறது. மனிதர்களும் மரங்களின் இந்த உயரிய பண்பை பின்பற்றினால் பொறுப்பான சமுதாயம் சாத்தியமே.

நம் முன்னோர்கள் மரங்களையும் காடுகளையும் போற்றியதால் தான் மழை வளம் மிகுந்து மிகுந்த செழிப்பான வாழக்கை வாழ்ந்தனர்.
ஒவ்வொரு மலையும் அடர்ந்த காடுகளை கொண்டிருந்தால்தான் மேகங்களை ஈர்த்த்து மழை பெய்ய வைத்து ஓடைகளையும் ஆறுகளையும் ஒட வைக்க முடியும்.
இந்த மலையில் போட விதை பந்துகளை மலையனூர் செக்கடி கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளி மாணவர்கள் தங்கள் பிஞ்சு கரங்கள் மூலமாக மிகுந்த ஆர்வமுடன் செய்து கொடுத்தனர். இந்த தருணத்தில் இந்த பள்ளி மாணவர்களுக்கும் அவர்களை வழி நடத்திய ஆசிரியர் திரு. சஞ்சிவி குமார் மற்றும் தலைமை ஆசிரியருக்கும் பணிவான நன்றிகளை சமர்பிக்கிறது.

மேலும் மலையனூர் செக்கடி சைவ ஆன்மீக செயற்பாட்டாளர் திரு. அசோக் குமார் , அவரின் அண்ணன் திரு. சதீஷ் குமார், அண்ணி திருமதி . ப்ரியா சதீஷ் மற்றும் ஆன்மீக அன்பர்கள் திரு. திருப்பதி , திரு. சங்கீத், திரு. தட்சிணாமூர்த்தி, திரு. சந்துரு ஆகியோர் இந்த மலையையும் சிவனாகவே பாவித்து இயற்கை வளர்க்க வருபவர்களையும் சிவனடியார் போலவே பாவித்து வந்திருந்த அனைவருக்கும் தங்கள் கைகளாலேயே உணவு சமைத்து, விதைப்பதிலும் பங்கு கொண்டு , உணவையும் மிக அன்போடு பரிமாறி இந்த இயற்கை வழி ஆன்மீக பணிக்கும் உறுதுணையாக இருந்தனர். அனைவருக்கும் இயக்கத்தின் பணிவான வணக்கங்கள்.


மலையனூர் செக்கடி மாணவர்கள் தாங்களும் இது போல் மலை ஏறி விதைக்க வேண்டும் என்று தங்கள் ஆவலை வெளிப்படுத்தினர். அவர்களையும் விரைவில் மாவட்ட கல்வித்துறை, பள்ளி நிர்வாகத்தினர் அனுமதியுடன் மலைகளில் விதைப்பதற்கு அனுமதி பெற்று வருவதாக வாக்களித்து இருக்கிறோம். இந்த இளம் நெஞ்சங்களின் ஆர்வம் தான் நமது எதிர்காலம் மிகவும் பசுமையாக வளமுடன் இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

English Version ஆங்கில வடிவம்

Comments

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students