A Responsible Actor - Vivekh
பொறுப்புள்ள நடிகர்
சினிமாவில் கிடைத்த புகழை வைத்து பசுமை கடை விரித்த ஒரு மனம் நிறைந்த மனிதனை அவரின் மூச்சு பிரபஞ்ச காற்றில் கலந்த பின் நினைவு கூறுகிறோம்.
இது வரை எத்தனையோ தலைவர்கள் , நடிகர்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு சிலரை தவிர எல்லா தரப்பினரையும் தனது செயலினால் ஈர்த்து அவர்களின் உடல் மரணித்த போது அவர்களது பிரிவிற்காக ஏங்குவது மக்களின் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு அடுத்து திரைப்பட நடிகர் திரு. விவேக்கிற்கு தான் கிடைத்திருக்கிறது.
நேற்று 17.4.21 அவர் உடல் எரியூட்டப்டுவதற்குள் பற்பல ஊர்களில் மிகவும் உள்ளடங்கிய கிராமங்களில் கூட அவர் நினைவாக அவர் தொடங்கிய மரப் பணியாக அறப்பணியாக பல்வேறு இடங்களில் மரங்களை நட்டு அவரின் பசுமை கனவுகளை நினைவாக்க இளைஞர்கள் முனைந்தார்கள்.
திரு. விவேக் அவர்கள் சினிமாவில் நடித்ததினால் பிரபலம் அடைந்தவர். ஆனால் பல சினிமா பிரபலங்களின் மறைவின் போது அவர்கள் நண்பர்கள் உறவினர்கள் தாண்டி பல தரப்பட்ட மக்களும் வருவது மிகவும் அரிது.
இதற்கு முக்கிய காரணம் திரு. விவேக் தனது சினிமா பிராபல்யத்தை புகழை பசுமைக்காக பயன்படுத்தியதால் அவரின் பசுமை நேயம் பலரையும் அவர் பால் ஈர்த்துள்ளது. இதில் நமக்கு இயற்கை புரிய வைக்கும் மாபெரும் உண்மை நம் அன்றாட வாழ்வில் நாம் அனைவருமே பசுமை விரும்பிகள் தான். ஆனால் நம்மில் பல குடிமக்களுக்கு நமது உலக்த்தின் பசுமையை எப்படி காப்பது, எப்படி வளர்ப்பது என்பதே தெரியவில்லை. பசுமைக்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்ட இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா, அப்துல் கலாம் அய்யா போன்றவர்களை அரசியல் கட்சி பேதமின்றி எந்த மத ஜாதி பேதமின்றி மக்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இயற்கை அனைவருக்கும் பொது. அதில் பசுமை நமக்கு மிகவும் இதம் தருவதால் அதற்கு போராடும் மரம் வளர்க்கும் ஒவ்வொரு கரங்களையும் நமது பசுமை விரும்பும் சமுதாயம் போற்றி கொண்டாடுகிறது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் அருள் வாக்கான "தரு ஓங்க தருமம் ஓங்கும்" என்பதற்கேற்ப தரு வளர்க்க தன் புகழ் கொண்டு தருவின் அருமை பெருமைகளை உலகறிய செய்த தனது திரைபட நடிப்பால் புகழடைந்த மனிதர் ஒரு பொறுப்புள்ள மனிதராக பலர் மனங்களிலும் நல்ல பசுமை சிந்தனைகளை வளர்த்த திரைபட நடிகர் சமூக செயற்பாட்டாளர்
திரு. விவேக்கை "பொறுப்புள்ள நடிகர்"
என்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் வாழ்த்தி வணங்குகிறது.
இந்த படத்தில் திரு. விவேக் அவர்களின் மொட்டை தலையினை போல் தான் நமது நாட்டின் பெரும்பாலான மலைகளின் நிலைமை மொட்டையாக உள்ளது. மலைகள் தோறும் மரங்கள் வளர்த்து மேகத்தினை ஈர்த்து ஆறுகளை ஓடச் செய்வோம். மரங்களுக்காக தன் வாழ்நாளில் பெரும் பங்காற்றிய அனைவரையும் நன்றியுடன் நினை கூர்வோம். அவர்கள் காட்டிய பசுமை பாதையில் நடப்போம் நடுவோம்.





Superb 👍🏻👌
ReplyDeleteSuper Kumar👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ReplyDeleteA Good Tribute to 'Chinna Kalaivanar', 'Maram Valartha Kalam Sishyar' Vivek
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete