Let us Become The Light

 தீப ஓளி ஆவோம்



All the Turbulences in Human life are towards achieving a balance and a sense of equality. Though by nature, every life form is unique and are incomparable. To raise beyond comparison and equal and One and Only one, status is to become a boundless Light going beyond comparison.
மனித வாழ்வில் சலனங்கள் அனைத்தும் ஒரு சமத்துவத்தை அடையவே நடக்கிறது. ஆனால் இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தனித்தன்மையானது ஒப்பிட முடியாதது. ஒப்பிடும் நிலையை தாண்ட எல்லை இல்லா பேரொளியாக மாறுவதே ஒப்பீடற்ற ஒரே நிலை அடைய வழியாகும்.

There are many instances referred in ancient texts about some saints who could convert their physical body in to a spectrum of Light, like Saint Manikka Vasagar, Saint Nandanar, Saint Andaal and the Latest in the list is Saint Vallalar or Rama Linga Adigal, who could dissolve his body in to a bundle of Light just about 150 years ago. 
பெரிய புராணம் போன்ற பண்டைய நூல்களில் மாணிக்கவாசகர், நந்தனார் போன்ற நாயன்மார்களும் ஆண்டாள் போன்ற ஆழ்வார்கள் தங்கள் பரு உடலை ஒளி உடலாக மாற்றியதற்கான சாத்தியத்தை கூறுகின்றன அந்த வழியில் மிக சமீபத்திய நிகழ்வு 150 வருடங்களுக்கு முன்னால்  திரு அருட்பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார் தன் உடலை ஒளி உடம்பாக்கியது.

In this century, we expect the logical mind of reasoning the theory, especially by Modern day Scientists to prove or propose a Thoery. fundamentally we need to understand that Science is all about understanding and defining the Nature of the universe in its entirety and elements. The Well renowned scientists like Albert Einstein proposed the theory of light particles and even gave a formula E=MC2 ( square )
. The main difference between a modern day scientist and ancient rishis or siddhas is that Scientists present it as a theory with all their ifs & buts, whereas Siddhas or saints give a commentary based on their own personal experiences. 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு காரண அறிவிற்கு புரிய கூடிய ஒன்றை தான் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறோம். அதிலும் ஒரு வெள்ளை தோல் நிற விஞ்ஞானி தனக்கு தோன்றியவற்றை பக்கம் பக்கமாக எழுதி அதற்கு ஒரு பார்முலா ஒன்றின் மூலமாக குறிப்பிட்டால் நாம் அதனை நம்புவோம். கடந்த நூற்றாண்டின் மிக சிறந்த விஞ்ஞானியாக கருதப்பட்ட திரு. ஆல்பர்ட் ஐன்ஸைடன் அவர்கள் அனைத்தும் ஓளியிலிருந்து வந்தவை, ஓளியின் வேகத்தை தொடர்புபடுத்தி ஒரு கோட்பாட்டை உலகிற்கு தந்தார்கள். இதனை நாம் அனைவரும் பாடங்களிலும் படித்திருப்போம்.  விஞ்ஞானிகளுக்கும் மெய்ஞானிகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு மெய்ஞானிகளான சித்தர்கள், முனிவர்கள் தங்கள் உள் அனுபவத்தால் உணரந்ததை உலகிற்கு அளித்தவர்கள், மற்றவருக்கு அந்த பேரொளியை உணர வைக்கும் தவ வலிமை பெற்றவர்கள். 

Even according to some section of scientists, that whole of universe was being created from Sound and from Light. So according to that theory, if many physically tangible forms can be created from Light, reverse of dissolving the physically tangible form to be dissolved as a Light is possible. 
இதனை சில விஞ்ஞானிகள் இந்த பிரபஞ்சம் ஒளியிலிருந்தும் ஒலியிருந்தும் உருவானது என்ற கருத்தை முன் வைக்கின்றனர். அந்த தத்துவப்படியே கூட ஒளியிலிருந்து நம்மால் தொட ,பார்க்க முடிகிற பரு உடலை உருவாக்க முடியும் என்றால் பரு உடலை ஒளியாக மாற்றுவதும் சாத்தியமே.

In this case of Saint Vallalar, even for many doubting minds, he has given clear path , step by step procedure to realise the light residing in the body at a specific location and process to enlarge and dissolve the human body in to light in no of hymns written by him. He also demonstrated practically to dilute his form in to infinite light.
திரு வருட் பிரகாச வள்ளலார், மிகத் தெளிவாக படிப்படியாக ஒளி உடம்பை பெறுவதற்கான வழிமுறைகளை தன் பாடல்கள் மூலமாக ஒளி இந்த பரு உடலில் எங்கு தங்கியிருக்கிறது என்று தெளிவாக குறிப்பிட்டதோடு அந்த வழியிலேயே தன் உடம்பை ஒளி உடம்பாக்கி பிரபஞ்ச பேரொளியில் நீக்கமற கலந்துள்ளார்.

Responsibile Citizens iYakkam, in its quest to make a society, where Peaceful co-existence of all beings is possible, wishing every being on this occasion of festival of lights, Deepavali or Diwali, practices presented by Saint Valllar in to No. of projects to reach a perceivable state of reality to practice and enable the possibilities to wider domain.  
                                    அனைத்து ஜீவராசிகளும் அன்போடு இணைந்து வாழும் உலக சூழலை உருவாக்க வள்ளலாரின் இறைநிறை தத்துவத்தின் கோட்பாடுகளின் படி பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் இந்த தீப ஒளி திருநாளில் வாழ்த்தி, இதற்காக செயல்படுத்தி வரும் பல செயல் திட்டங்களை  தங்களுடன் பகிர்கிறது.

Trees on Every Hill Project மலைகள் தோறும் மரங்கள்
  All leaders, revolutionaries visualized a world with a sense of equality and social justice. This is possible, when there is righteousness is established. Here Vallalar says righteouseness is directly proportional to the density of trees. If the no. of trees are reduced, the dharma or righteousness is less perceived. Here RCi, is conducting the efforts to increase the trees especially on Hills, in our "Trees on Every Hill" project.  
உலகத்தின் பல தலைவர்களும் சிந்தனையாளர்களும் விரும்பிய சமத்துவமான சமூகம் தருமம் நிரம்பிய இடத்தில் தான் சாத்தியம். "தரு ஓங்க தருமம் ஓங்கும்" என்கிறார் வள்ளலார். மரங்களின் அடர்த்தி கூட கூட தருமம் கூடும் என்கிறார். மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய அதருமம் மேலோங்கும். தருமம் என்ற சொல்லே தரு என்கிற மூலச் சொல்லில் தான் பிறக்கிறது. மரங்களின் இயல்பான தன்மையே தன்னை சார்ந்து இருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் அனைத்தையும் தரவல்லது. இதனாலேயே பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் "மலைகள் தோறும் மரங்கள்" திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

Nature has naturally created hills as a sign of abundance where most of the rivers originate and give prosperity to every creature on its way. Till now, human beings are not able to build one hill though could destroy many hills. Hence it is important for Humans to protect the natural magnificence. 
இயற்கையின் பேராற்றலின் வெளிப்பாடே மலைகளாகும். உலகத்தில் ஓடும் பெரும்பாலான ஆறுகள் மலைகள் மீது தான் உருவாகின்றன. இந்த நாள் வரை, மனிதனால் உருவாக்க முடியாத ஒரு பெரும் வடிவம் மலைகளே. ஆனால் மனிதர்களால் பல மலைகளை அதன் மீது வளரும் காடுகளை அழிக்க மட்டுமே முடிகிறது. தன்னால் உருவாக்க முடியாத ஒன்றை காக்கவாவது வேண்டும் என்ற நோக்கில் இந்த செயல் முயற்சி. ஆறுகள் எல்லா வளங்களையும் வாரி வாரி வழங்குவதால் அவைகள் எல்லாம் "வள்ளலாறு" தான்.

The world can function in order, when its least protected, most vulnerable beings are protected and live with dignity and feel safe on Earth. Due to rapid urbanization, many places on the earth have become cities and pedestrians have become victims of gross social injustice. Hence Responsible Citizens iYakkam is conducting PEDESTRIANS FIRST programme to bring sense of safety and dignity to the lives of most eco-friendly entities on roads.

உலகத்தில் மிகவும் பாதுகாப்பற்ற உயிரினங்கள் பாதுகாப்பை உணறும் சூழலை உருவாக்குவதே நமது "பாதசாரிக்கே முன்னுரிமை" என்ற செயல்திட்டமாகும். உலகத்தின் பல நாடுகளிலும் அதிவேகமாக நகரங்கள் உருவாகிவிட்டன. இந்த வேகமான உலகத்தில் மிக மெதுவாக நகரும் உயிரினங்கள் அனைத்தும் தொல்லைகளாக பார்க்கும் மனப்பான்மை பெருகிவிட்டது. அனைவருக்குமான சமூகம் வளர சுற்றுப்புற சூழலை அதிகம் மாசுப்படுத்தாத முக்கியமான அங்கமான பாதசாரிகளை பாதுகாப்பதில் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் விழிப்புணர்ச்சியை பெருக்குவதில் முனைந்து செயல்பட்டு வருகிறது.

Meat Eats & Heats the Earth ஜீவகாருண்ய ஓழுக்கம்
Saint Vallalar, had emphasized, the deep compassion in one's heart to every fellow being is the key to evolution and important step in becoming the status of Gracious Light in Abundance. In this most important process, the Saint insists on the quality of food and importance of plant based diets. At this point of time, many scientists are forecasting to relocate to Mars & Moon in search of life and water due to extrapolation of Land requirement in a Meat based food diet. 
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு என்ற ஜீவகாருண்ய ஒழுக்கம் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அருட்பெருஞ்ஜோதியாவதில் முக்கியமான படிக்கல்லாக வள்ளலார் முன்வைக்கிறார். உணவு சமைப்பவரின் எண்ணம் முதற்கொண்டு இந்த உலகத்தை சமைப்பதில் முக்கியமாக கூறும் வள்ளல் பெருமான் புலால் மறுத்தல் என்ற திருவள்ளுவரின் வாக்கின்படி, வள்ளலார் வையகம் வளமோடு வாழ தாவர உணவுகளையே உலக நல்லிணக்கத்திற்காக அருளுகிறார்.  இன்றைய சூழலில் மாமிச உணவு வழங்க வேண்டும் என்றால் இந்த பூமி பந்தில் இடம் பற்றாது என்று செவ்வாய்க்கு போகலாமா நிலவில் குடியேறலாமா என்று ஆராய்ச்சியாளர்கள் வாழும் சூழலை ஆராய்ந்து வருகின்றனர். 

Saint Vallalar, opened a Kitchen 150 years ago to feed everyone, which is still functioning. Fundamental of feeding everyone is possible only with plant based diets. People may feel, food habits are personal issues, but due to animal farming, land availability to feed everyone with meat based food is not possible with the available land in Earth. Whereas if everyone switch over to Plant based diet, The same Earth can even feed 6 more times of the present population. 
அனைவருக்கும் உணவு வழங்க 150 வருடங்கள் முன்பாக ஒரு அணையா அடுப்பை வள்ளல் பெருமான் ஏற்படுத்தி தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகிறார். அனைவருக்கும் உணவளிக்க தாவர (மரக்கறி) உணவு மட்டுமே சாத்தியமானது.  உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உட்பட்டதாக நினைக்கலாம். மாமிச உணவு உண்பது பட்டினியால் வாடுபவரின் உணவை பறிப்பது போலாகும். அனைவருக்கும் மாமிச படைக்க இந்த பூமி போதாது. அனைவரும் தாவர உணவிற்கு மாறினால் இன்னும் ஆறு மடங்கு மக்கள் தொகை உயர்ந்தாலும் உணவு படைக்கலாம். 


At this point of time when we are all discussing about climate change or global warming, amount of land, water and energy we are consuming to producing a KG of Meat is heating the earth. We are just sharing two charts to show the Magnitude of the issue on Hand.

பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதல் என்று நாம் பரவலாக பேச துவங்கியுள்ள வேளையில், ஒரு கிலோ மாமிச உணவு தயாரிக்க தேவைப்படும் நிலம், நீர், மற்றும் வெப்ப தேவைகளை கணக்கிட்டால் இந்த பூமியில் வாழும் நாட்களின் எண்ணிக்கையை குறைக்கும். மேலே கொடுத்துள்ள வரைபடத்தில் நமது இன்றைய உலக உணவு நிலையில் யதார்தத்தை உணரலாம்.

On this occasion of Deepavali (Diwali ), at this point of time 24th Oct 2022, RCi, wishes everyone the possibility of becoming the Light, become Omni present - a state of equality without any distinction on Quality, Ultimate Delight of existence forever. This is simply possible, as Saint Vallalar has given us the simplest formula. Plant the Tree, Respect Every Being and feed everyone.

இன்றைய தீபாவளி நன்னாளில் அனைவரும் தீப ஒளியாக மாறும் வாய்ப்பை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே நமது பொறுப்பாக செயலாற்றுவோம். நிறைவான வாழ்வை தேடும் மனித வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய அருட்பெரும் ஒளி வாழ்வை நோக்கி பயணிப்போம்.
வள்ளலார் இந்த இலக்கினை அடைய மிக எளிமையான ஒரு வழிமுறையை நமக்கு வாழ்ந்துகாட்டி வழிகாட்டியுள்ளார் - மரம் நடுதல் மற்றும் பராமரிப்பு, ஒவ்வொரு உயிரையும் மதித்தல் மற்றும் அனைவருக்கும் உணவளித்தல் என்பதை கடைபிடிப்பதன் மூலம் நாமும் வள்ளலாகலாம்.

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2022
Responsible Citizens iYakkam 2022





Comments

  1. Responsible message and Article.
    As long we preserve nature, nature protect us, if we start abusing, we have already seen the fury in the form of pandemics, floods...
    Respect life of fellow living beings. Appreciate Pedestrians.

    ReplyDelete
    Replies
    1. Preserving Nature Protecting Pedestrians Promoting Plant diets is the mission

      Delete
  2. It's great that you are able to connect the light with life in a very presentable way. Hat's off. All the best for your endeavor to preserve the pedestrians.

    ReplyDelete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students