TEA estates Gone RAINFORESTS Coming
தேயிலை தோட்டங்களை
சோலை மழைகாடாக்க முயற்சி
இந்தியாவில் கடந்த 300 ஆண்டுகளாக சோலை மலை மழை காடுகளை அழித்து தேயிலை தோட்டங்களை ஆங்கிலேய அரசு இந்தியாவின் பல மலைகளில் உருவாக்கி 200 அடி உயர்ந்த மரங்கள் இருந்த இடங்களில் 4 அடி உயர தேயிலை பயிர்களை விளைவிக்க ஆரம்பித்து இந்தியாவில் மிக அதிகமாக மழை பெய்த நீலகிரி மலைத் தொடரில் இன்று தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அளவிற்கு ஆளாக்கியுள்ளது.
ஆனால் இன்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் நற்செய்தி. கிட்டத்தட்ட 6000 ஏக்கர் பயன்பாட்டில் இல்லாத "டான்டீ" யின் தேயிலை தோட்டங்களில் சோலை மழைக்காடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது.https://www.dinamalar.com/news_detail.asp?id=3158368
முறையாக செயல்பட்டால் இன்னம் ஒரு 20 வருடங்களில் இந்த இடத்தில் ஒரு அடர் வனம் உருவாக வாய்ப்புள்ளது. இது போல் இந்தியாவில் உள்ள தேயிலை தோட்டங்களும் மீண்டும் மழைக்காடுகள் ஆக வேண்டும் ஆனால் நமது தண்ணீர் தேவைகளை நிறைவேறும்.
தேயிலை வியாபாரம் குறையும், பலரின் தொழில்கள் பாதிக்கப்படலாம்.
தேநீரை விட குடிநீர் உயிர் வாழ அத்தியாவசியம்.
அதுவும் தவிர மாவிலை, கொய்யா இலை, நாவல் இலை போன்ற பல மர இலைகளிலும் மிகவும் ஆரோக்கியமான மூலிகை தேனீர் தயாரிக்க முடியும்.
வருங்காலத்தில் தண்ணீருக்காகத்தான் போர் மூளும் என்று பலரும் ஆருடம் கூறியிருப்பதால் நாம் இழந்த மழைக்காடுகளை, நீர் வளத்தை மீட்க இதுவும் ஒரு சிறந்த வழி.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் , ஒவ்வொரு குடிமக்களின் பொறுப்பாக, இந்த மழைக்காடுகள் உருவாக்க தங்களின் பங்களிப்பாக ,தேநீர் குடிப்பதை படிப்படியாக குறைக்க வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும் பல மரங்கள் மலைகளில் நட்டதற்கு சமம்.
எல்லா குடிமக்களும் மலைகள் அருகில் வசிக்க வாய்ப்பில்லை ஆனால் நீங்கள் உங்கள் வாயில் "டீ" வைக்காமல் இருந்தாலே நீங்களும் உங்கள் பசுமை பங்களிப்பு அளித்தற்கு சமம்.
கூடலூர் வனத்துறையின் இந்த முன் முயற்சி வெற்றி பெற இந்த நடவடிக்கையை அனைவரிடமும் பகிர்கிறோம்.
ஒவ்வொரு கப் டீயிலும் ஒரு ட்ரீ (மரம்) இருக்கிறது என்பதை உணர்வோம். மலைகள் மீது வளர்க்கப்படும் தேயிலை அதன் இலைகளுக்காக 3-4 அடிகளுக்குள்ளாகவே கவாத்து செய்யபடுகிறது. மலைகள் மீது மேகங்கள் இறங்குவதை இந்த உயரம் குறைவான தேயிலை தரும் மரங்கள் குறைக்கின்றன. தேயிலை வளரும் பகுதிகளில் எல்லாம் மழை பொழிவு குறைந்து கொண்டு வந்து அது தேயிலை தரத்தையே பாதித்தும் விட்டது.
மரம் வைக்காமலே மரங்கள் வளர்க்க ஒரு வாய்ப்பு.
நாம் தேநீர் கோப்பையில் உறுஞ்சுவது மேகங்களை தான் என்பதை உணர்வோம்.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் "தேநீர் தவிர்ப்போம்" என்ற உறுதிமொழியை ஒவ்வொரு பொறுப்புள்ள குடிமகனின் , குடிமகளின் "மலைகள் தோறும் மரங்கள்" செயல்திட்டத்தின் அங்கமாகவே பார்க்கிறது.
![]() |
| Share |
![]() |
| பகிர் |
Responsible Citizens iYakkam OCT 2022




Amazing news.Are they ensuring diverse species are planted? The younger generation of tribal communities have moved from their roots . I hope we don't end up aping the American reservations
ReplyDeleteநிச்சயமாக சோலை மரக்காடுகளை சேர்ந்த நாட்டு ரக பலதரப்பட்ட மரங்களை நடுவார்கள் என்று நம்புவோம்.
DeleteGood Message
ReplyDeleteநமது வருங்கால சந்ததியினருக்கும் இந்த செய்தி சென்று சேர வேண்டும்
DeleteSure
ReplyDeleteநன்றி
Delete