Sivan Temple Bull rearing சிவன் கோவில் காளை மாடு வளர்ப்பு
மீண்டும் கோவில் காளை திட்டம்
No Bulls in Villages - Even if a male calf is born it is meant for meat
இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான பசுக்ளுக்கு சினை ஏற்றுவது ஊசி மூலமாகத்தான். முக்கிய காரணம் இன்று பல கிராமங்களில் காளை மாடுகளே இல்லை. பசுக்கள் காளை கன்றுகளை ஈன்றாலும் அவை வெட்டுக்கு ( மாமிசமாக ) அனுப்பப்படுகிறது.
Cows impregnated by Artificial Insemination Only
டிராக்டர்கள் வந்த பிறகு வயலில் உழுவதற்கு எருதுகளின் பயன்பாடுகள் குறைந்து விட்டது. அதே போல் வண்டி மாடுகளின் தேவையும் குறைந்து விட்டது.
டிராக்டர்கள் வந்த பிறகு வயலில் உழுவதற்கு எருதுகளின் பயன்பாடுகள் குறைந்து விட்டது. அதே போல் வண்டி மாடுகளின் தேவையும் குறைந்து விட்டது.
No use of Bulls for Human Beings
இதனால் கிராமங்களில் காளை மாடுகளை பராமரிப்பது எதற்கு என்ற எண்ணம் விவசாயிகள் மனதில் தோன்றியதால் கிராமங்களில் காளை மாடுகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. பசுக்களையும் அவைகள் பால் கறக்கும் வரையிலேயே பராமரிக்கிறார்கள்.
Temple Bull Project :
இந்த சூழலில் தான் கிராமங்களில் மீண்டும் சிவன் கோவில்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்து வந்த பழக்கமான "கோவில் காளை" திட்டத்தினை மீட்க முடியுமா என முயற்சி செய்து வந்தோம்.
Sengol in Parliament - Bull the symbol of Righteousness
கடந்த ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டில் சைவ மட ஆதினங்கள் கரங்களினால் ஆசீர்வதித்த செங்கோல் நிறுவப்பட்டது. அந்த செங்கோலின் முக்கியமான சின்னமே நந்தியம் பெருமானான சிவபெருமானின் வாகனமான காளை தான்.
Tiruvannamalai District, Malaynoor Chekkadi Village Kasi Viswanathar Siva Temple
இந்த காரணங்களால் சில சிவன் கோவில்களில் " மீண்டும் கோவில் காளை திட்டம்" கொண்டு வர முடியுமா என்று முயற்சித்தோம். இதில் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம் மலையனூர் செக்கடி கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு கடந்த சிவராத்திரி அன்று (8.3.24) ஒரு காளை ஒன்றை சிவனுக்கு நேர்ந்துவிட்டதாக கோவிலின் நிர்வாகி சிவத்திரு. அசோக் குமார் தகவல் தந்தார்.
Lord Siva's wish to feed the real Bull
சிவபெருமானே உயிருள்ள ஒரு நந்திக்கு பூஜை செய்து உணவளித்து பராமரிக்க சொல்வதாக உணர்ந்து இந்த கோவில் அருகிலிருக்கும் கிராமங்களில் இந்த காளையை பராமரிக்க ஆட்களை தேடினோம். இன்று 22.3.24 ப்ரதோஷத்திற்கு முதல் முறையாக நேரடியாக இந்த காளை மாட்டிற்கே அலங்காரங்கள் செய்து மீண்டும் இந்த கிராமத்தில் ஒரு காளை வலம் வர முக்கிய முயற்சிகள் எடுத்து இந்த திட்டத்திற்கு புத்துயிர் அளித்துள்ள திரு. சேகர், திரு. செல்வராஜ் மற்றும் இது நாள் வரை காளைக்கு தங்கும் இடம் கொடுத்த திரு. முருகன் மற்றும் ரெட்டியார்பாளையம் இயற்கை விவசாயி திரு. சிலம்பரசன் ஆகியோருக்கு பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.

Let us enable Bull to breed with Cows
இந்த காளையுடன் இணைக்க இந்த கிராம மக்கள் தங்கள் பசுக்களை அழைத்து வந்து பாரம்பரிய காளையின் இனத்தை பெருக்க முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
This Earth is for All beings not just for Human Beings
இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இங்கு எந்த விலங்கினம் வாழலாம் அல்லது கூடாது என்று மனிதர்களாகிய நாம் முடிவெடுத்து இந்த பூமியை அதிக வெப்பமாக்கி எந்த உயிரினமும் வாழ தகுதியற்ற ஒரு தளமாக மாற்றி வருகிறோம். காளையினால் மனிதருக்கு என்ன பயன் என்ற சிந்தனை மாற வேண்டும்.
Feed the Bull
இது போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் ஒரு காளையாவது வளர்த்து - திருமூலரின் கூற்றின் படி "பசுவிற்கு ஒரு வாயுறை" என்பதை "காளைக்கும் ஒரு வாயுறை" என்று பராமரித்து இந்த மண்ணின் இனங்களை காப்பாற்ற வேண்டும். செங்கோலில் இருக்கும் காளையின் சின்னத்தை உயிர்பிப்போம்.
இந்த பூமியில் எந்த விலங்கும் எந்தவிதமான விலங்குகளுமின்றி மனிதர்களுடன் ஒன்றிணைந்து அன்புடன் வாழ பொறுப்புள்ள சமுதாயம் சமைப்போம்.
Responsible Citizens iYakkam 2024
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2024

Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society