நம்மாழ்வாரை தேடி - பயணம் 1

                            நம்மாழ்வாரை தேடி - பயணம் 1

                                                   நம்மாழ்வார்...நம்மை ஆள்வார்



20ம் நூற்றாண்டு தொடங்கையதில் இருந்து இயற்கையின் மீது பல்ருக்கும் ஆர்வம் அதிகரித்து வந்தது. பலருக்கும் இயற்கையை பற்றிய சரியான புரிதலை பெற ஒரு வழிக்காட்டியை தேடி வந்தனர். அந்த சமயத்தில் இயற்கை வழியில் வாழ்வியலை அமைத்து கொள்ள ஒரு விடிவெள்ளியாக வழிக்காட்டியாக வந்தார் இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழவார். அந்த சமயத்தில்; அந்த காந்தத்தை அந்த ஏகாந்தம் மிகு வானகத்தில் கண்டு, உரையாடினோம் பலர். 2013ல் அவரின் பயிற்சி பட்டறையில் தீட்டப்பட்ட பொறுப்புள்ள இயற்கை ஆர்வலர்கள் பலர். அந்த படம் இதோ.

அந்த படத்தில் இடது பக்க ஓரமாக குத்துகாலிட்டு குதுகலமாக அய்யாவுடன் உரையாடிய அன்பு நண்பர் திரு தாமரை செல்வன் ( ஆரஞ்சு நிற கட்டம் போட்ட சட்டை அனிந்து இருப்பவர் அய்யாவின் 87ம் பிறந்த நாளில் அய்யாவை பற்றிய சிந்தனைகளை "பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்திற்காக " பகிர்ந்தார்.

நம்மாழ்வார் ஐயாவின் பிறந்த தினத்தை ஒட்டி அவர் கொடுத்து சென்ற கருத்துக்கைள பதிவிட்டு பரப்புவதே அவர் உடல் உைழப்பிற்கும், அவரது நல்ல எண்ணங்களுக்கும் நாம் ெசய்யும் ைகமாறு. அவர் விரும்பியதும் அதுேவ...,

ெசயல்பட்டதும் அதற்காகவே.          நம்மாழ்வார் ஐயா வழங்கிய இயற்கை

வேளாண்மை குறித்த பயிற்சியில் அவர் முதலில் விளங்க வைக்க முயற்சித்தது....

..."நஞ்சில்லா உணவு"...

நஞ்சு கலக்காத உணவுகள் வேண்டுமானால் அறம் சார்ந்த தற்சார்பு வாழ்வியல் முைறைய முன்னெடுத்து இயல்பாக கிைடக்கும் இயற்கை உரங்கைள கொண்டு நாம் உண்ணுவைத விளைவிக்க வேண்டும் அல்லது விளைவதை உண்ண பழகிகொள்ள வேண்டும்

 நம்மால் உற்பத்தி செய்ய இயலாத உணவு பொருட்கைள வெளியில் இருந்து வாங்கும் போது ரசாயன கலப்பற்றதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்....

 இப்படி ஐயா சொன்ன பிறகு உணவு சந்தையே தன்னை மாற்றிக் கொண்டது அல்லது மாறுவதாக காட்டிக் கொண்டு இருக்கிறது.

எடுத்துக்காட்டாக...

நம்மாழ்வார் ஐயாவின் வருைகக்கு முன் சந்தைக்கு வராத 

ரீஃைபண்ட்செய்யப்படாத செக்கு எண்ணைய்,


ப்ளீச் செய்யப்படாத நாட்டு சர்ககரை,  

பாரம்பரிய அரிசி ரகங்கள், 

மரபு வழி வந்த வரகு, திணை, சாமை,  குதிைரவாலி என்றபோன்ற இன்னும் பல சிறுதானியங்கள், 

ரசாயன உரம் அற்ற காய்கறிகள், பழங்கள் இன்னும் பல பொருட்கள், நம்மாழ்வார் ஐயாவின் வருைகக்கு பின் சந்தைக்கு வந்து இருக்கிறது என்றால் அவருைடய சொல் மற்றும் கருத்து ஆழம் எவ்வளவு ஆளுமை மிக்கது என்பைத நாம் அறிந்து ெகாள்ளலாம்.....

 உணவு பொருட்களில் மட்டுமா?...

பல மனிதர்களின் மனமாற்றத்திலும் அவரது ஆளுைமைய காணலாம்.ம் 

 என்னை போன்ற பல மனிதர்கள் படித்து வேலைக்கு சென்று அன்றாட குடும்ப

தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் ஈட்டுவது மட்டுேம இலக்கு என இருந்த குறுகிய மன ஓட்டத்தை மாற்றி குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய தற்சார்பு வாழ்வியல் முறையே போதுமானது என்றும் கிைடக்கும் இதர நேரங்களில் சுற்றுச்சூழல், மழைநீர் அறுவடை , அரசு கொள்கை முடிவுகள் போன்ற சமூகம் சார்ந்த விடயங்களில், நேரத்தை செலவிட முடியும் என்பைதயும் புரிய வைத்தது அவரது ஆளுைம மிகுந்த எதார்த்த பேச்சு....


செயற்கை ரசாயன உரங்கள் எப்படி மண்ணை மலடாக்குக்கிறது என்றும் அதை மறுபடி எப்படி உயிர்ப்பிப்பது எனவும், விளையாது என ஒதுக்கப்பட்ட மண் கண்டத்தை எப்படி மண் தன்மையை மாற்றி விளைவிக்க முடியும் என்பைதயும் வானகம் போன்ற இடங்கைள அவரது தாரக மந்திரமான மூடாக்கு, அமிர்த கைரசல், பஞ்சகவ்யம் போன்ற வழிமுைறகைள கொண்டு சோலையாக மாற்றி காண்பித்து தனது கருத்துக்களின் உண்மைத்தன்மையை நிரூபித்திருக்கிறார்...


மரபு வழிமுைறகைள எடுத்தாண்டாலும், தற்போதைய உலக வழக்கங்களிலும் கவனம் செலுத்தி நமது நாட்டில் விைளந்த பொருட்களுக்கு பிற நாடுகள்சொந்தம் ெகாண்டாடி ேபட்டன்ட் (patent) வாங்க முயல்வைத கண்டு நாட்டின் முண்ணனி போராளிகளுடன் இனைந்து வரலாற்று பதிவுகள் மூலம் நிரூபித்து மீட்டெடுக்க உதவியுள்ளார்..

 கல்வி முறையில் மாற்றம் - சுவரில்லா கல்வி

மேலும், தற்போதைய கல்வி முறை குழந்தைகளின் நேரத்தை திருடுகிறது என சுட்டிக்காட்டி, வாழ்க்கைக்கு தேவையான கல்வியை கற்க முடியாத குறைபாடு பற்றியும், அதற்கு மாற்றாக சுவரில்லா கல்வி யின் ேதைவைய பற்றியும் விளக்கி உள்ளார் ...

 மரபு வழி மருத்துவம் :

மரபுவழி மருத்துவத்தின் மகிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆங்கில மருத்துவத்தின் பக்கவிைளவுகள் மற்றும் அதன் அரசியல் குறித்த அவரது தொலைனோக்கு பார்வை அனைவரையும் மருந்தில்லா மருத்துவம் பற்றி சிந்திக்க வைத்து இருக்கிறது. நோயினை கொண்டாடுவாம் என்ற கருத்துரு மூலம் தற்காலத்தில் நோய் என்று சொல்லப்படுகின்ற தன்மையின் உண்மை நிலையை விளக்கி அதன் மீதுள்ள பயம் நீக்க அவரது கருத்துகள் அடங்கிய புத்தகம் உதவுகிறது...

 

தற்சார்பு வாழ்வியல் முறைக்கு  தேய்வையான உணவுக்காக இயற்கை விவசாய முறைகள் பற்றி மட்டுமின்றி அதன் இணை கூறுகளான மருத்துவம், கல்வி, பொருளாதாரம், அரசியல் பற்றியும் ஒருங்கிைணந்த கருத்துகைள விவரித்து இருப்பதன் மூலம், அவரது சமூகம் குறித்த விரிவான பார்வையயும், அக்கைறையயும் அனைவராலும் உணர்ந்து கொள்ள முடியும்...

 

அப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் கொண்ட நம்மாழ்வார் ஐயாவை தொடர்ந்து

போற்றுேவாம்  பின்பற்றுவோம்.

அன்புடன்


தாமரை செல்வன்

இயற்கை வழி விவசாயி

திண்டுக்கல்


6 ஏப்ரல் 2025

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்

Responsible Citizens iYakkam


Comments

  1. தங்களுடைய பயணம் இனிமையாக அமைய வாழ்த்துக்கள் 💐🌱

    ReplyDelete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students