Posts

Showing posts from 2020

Responsible Rivers

Image
  பொறுப்புள்ள ஆறுகள்     ( English Version below the Tamil Version ) ஆறுகளை மீட்டெடுப்பதின் மூலம் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்க முடியுமா ???   ஆறுகள் வெறும் தண்ணீரின் ஓட்டம் மட்டும் அல்ல.   அது என்றும் ஒரு நாகரீகத்தின் உயிரோட்டம். உலகத்தின் அனைத்து நாகரீகங்களும் ஒரு நதிக்க்ரையில் தான் ஆரம்பமாகியுள்ளது. சிந்து சமவெளி நாகரீகம், நைல் நதி நாகரீகம், கங்கை, காவிரி, வைகை, தாமிர பரணி என்று அனைத்தும் நாகரீகங்களின் தொட்டில்களாக இருந்து வருகின்றன.   ஒடும் ஆறுகள் இயற்கையின் வளத்தின் அடையாளங்கள். அவை நிலத்திற்கு வளங்களை கொடுத்து வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் உணவின் ஆதாரமாக விளங்குகிறது. இயற்கையின் வளங்கள் கூடக் கூட மனிதர்களின் மற்றும் அனைத்து உயிரினங்களின் பரிமான வளர்ச்சியும் கூடி அனைத்து இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழுவதற்கு வழிச் செய்கிறது. ஆனால் இயற்கையின் வளங்களை மனிதர்களால் சுரண்டப்படப்பட உலகில் பல்வேறு விதமான மோதல்களும் அதனால் அமைதியின்மையும் போர் போன்ற கிளர்ச்சிகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. குடிக்கக் கூட தண்ணீர் இல்லாமல் பல நாடுகளில் மனிதர்களும் விலங்குகளு...

Malamanjanur Banyan pothu planting

Image
மலைமஞ்சனூரில் ஆலம் போத்து மரங்கள் Malamanjanur Banyan pothu planting   Dec 10 , 2020 போன வருடம் மலைமஞ்சனூர் மலையில் விதை பந்துகள் தூவினோம்.  அப்போதே விதை பந்துகளை காட்டிலும் போத்து மரக் கன்றுகள் நட்டு வளர்த்தால் மலையை விரைவில் முழுமையாக பசுமையாக்கி விடலாம் என்று கிராம இளைஞர்களிடம் சொல்லி இருந்தோம். Last year we sowed seed balls on this hill. That time itself we decided that Pothu trees are the best option for this hill to make it greener in shorter period of time. (  https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2019/11/10-2019.html ) இந்த ஊரின் பேருந்து நிறுத்தத்தின் பெயர் "அரச மரம் " ஆனால் அங்கே ஒரு பெரிய ஆலமரம் தான் இருக்கிறது. நமது நண்பர்கள் அந்த ஆலமரத்தில் கிளை வெட்டுவதற்கு சென்ற போது பலரும் இது போல் கிளைகளை வெட்டி நட்டால் மரங்கள் வளராது என்று இந்த இளைஞர்களை பயமுறுத்தியுள்ளனர். இருப்பினும் முயற்சி செய்வதில் தப்பில்லை என்று நான்கு மரக் கிளைகளை சிமென்ட் பைகளில் மண் இட்டு நட்டு தண்ணீர் விட்டு வந்துள்ளனர்.  முருகன் கோவில் இருக்கும் குன்றில் வளர்ந்த ப...

Parvatha Malai Greening Efforts

Image
  பர்வதமலையில் மரம் நடவு    Parvatha Malai Greening efforts   திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலைக்கு அடுத்து பிரபலமான ஆன்மீக சிவத் தலம் பர்வதமலை. அண்ணாமலையாரை காட்டிலும் உயரமான மலை. மலையின் உச்சியில் உள்ள சிவன் கோவில் ஏறுவதற்கு கடப்பாரையை பிடித்து கொண்டு ஏறுவது மிகப் பிரபலம் மற்றும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய ஒரு யாத்திரை. In Thiruvannamalai district in Tamilnadu, Parvathamalai is the second most famous hill shrine after the Thiruvannamalai hill & Shrine.   Parvatha Malai is very famous for its hill top shrine located on top of a steep rock. ஆனால் இந்த மலையின் உச்சியின் பெரும் பகுதி வெறும் கற்பாறைகள் தான்.   மரங்களே இல்லாமல் வெப்பம் நம்மை வாட்டும் அளவிற்கு நிழல் இல்லாத வறண்ட பாறைகள். The top of the hill is a dry rock, it radiates heat under the hot sun without much shade. இதனால் இந்த மலையில் வசிக்கும் விலங்குகள் கோடை காலங்களில் தண்ணீர் இன்றி வாடும் நிலைமை பற்றி பர்வதமலை பாதுகாப்பு குழுவின் மூலமாக நமது இயக்கத்திற்கு தகவல் கிடைத்தது. D...

மழைக்காலம் மரம் வைக்கலாம்

Image
  மழைக்காலங்களில் மரங்கள் நடும் போது மரங்கள் வளர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. நாம் தண்ணீர் விட அவசியமின்றி மழையே மரங்களை வளர்த்துவிட்டு செல்லும். பொறுப்புடன் மரங்கள் நடுவோம் பொறுப்புள்ள சமுதாயம் படைப்போம். Possibility of survival of trees saplings increases as it gets water regularly from rain itself.  This is the right time to plant trees and build a Responsible Citizens society. 

Greening Parvatha malai

Image
  The Thiruvannamalai, one of the most sought after spiritual city in the world also have many different hills in the district of about 6200 Sq. Kms area , which are part of Eastern Ghats mountain ranges.  உலகத்தின் ஆன்மீக தலை நகராம் திருவண்ணாமலை பெயரில் இருக்கும் 6200 சதுர கி.மீ பரப்பளவு  இருக்கும்  திருவண்ணாமலை மாவட்டத்தில் பல மலை குன்றுகள் உள்ளன . இவை கிழக்கு தொடர்ச்சி மலை தொடரின் ஒரு பகுதியாகும் . Apart from the world famous Thiruvannamalai hill, 2nd most popular & highly revered mountain in this district is Parvatha Malai.  உலக புகழ் பெற்ற அண்ணாமலை அடுத்து அதிகம் பிரபலமான மலை  பர்வத மலையாகும் .  இதுவும் ஆன்மீக தேடல் உள்ளவர்கள் தேடி  வரும் உன்னத மலை  தலமாகும் .  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த மலையில்  ஏற்படுத்தப்பட்ட தீ  பற்றியும் , மேலும்  வெயில் காலங்களில் தண்ணீர் இன்றி உண்ண  உணவின்றி  எப்படி வன விலங்குகள் - குரங்குகள், மான்கள் , காட்டு பன்றிகள் என்று பல  வகை  பிராணிகளும் தவிப்பதை பர்வத ம...

Let us make rivers ஆறுகள் செய்யலாம் வாங்க

Image
In Tamilnadu, North East Monsoon has set in with the birth of the Aippasi (Thula ) Tamizh Month  on 17th October 2020.  It is right time to plant trees on hills to increase the green cover & develop more perennial rivers across Tamilnadu as TN faces water scarcity in most parts of a year. தமிழ்நாட்டில் ஐப்பசி மாதம் ( 17.அக்.2020) பிறந்ததும் வடக் கிழக்கு பருவ மழைக்கான காலம் துவங்கி விட்டது. இந்த மழைக் காலத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் இருக்கும் பல வறண்ட மலைகளிலும் மலை குன்றுகளிலும் மரக் காடுகளை நட்டு வளர்த்து பல வற்றாத ஜீவ நதிகளை உற்பத்தி செய்வோம் வறட்சியிலிருந்து மீண்டு வளமோடு வாழலாம்.  வாங்க மலைகள் தோறும் மரங்கள் நட்டு  ஆறுகளை உருவாக்குவோம்.

1000 water falls is from DENSE FOREST TREES ON HILL

Image
ஆயிரம் நீர்விழுச்சி  அடர்ந்த மலைகளின் மீது மரக்காடுகளால் உருவாகிறது The above pictures shows different views of the Famous A Thousand Water Falls in East Java Islands in Indonesia . We are sharing this great natural beauty on the 18th Day of Tamizh Month AADI, which is celebrated by Tamizhs in Cauvery Belt by offering their thanks to the River Kaveri, which generally flows in abundance due to the onset of South west Monsoon in the Southern Part of India.  Most of the Rivers in the world originate from the dense forests on top of the hills. மேலிருக்கும் நிழற் படங்களில் இந்தோனேசியா நாட்டில் உள்ள கிழக்கு ஜாவா தீவுகளில் உள்ள ஓராயிரம் நீர்விழுச்சியின் படங்கள் பல்வேறு கோணங்களில்.  தமிழ்நாட்டில் இன்று ஆடிப் பெருக்கு பண்டிகை குறிப்பாக காவிரி ஆறு பொங்கி வரும் ஆடி மாதத்தில் விவசாயிகள் நன்றி தெரிவித்து பல வகை கலவைச் சோறு உண்டு கொண்டாடுவர்.  ஆறுகள் பெரும்பாலும் அடர்ந்த காடுகள் உள்ள மலைகள் மீது தான் உருவாகின்றன என்பதற்கு ஒரு அழகிய உதாரணம்.

Corona Lessons TO mankind

Image
கரோனா கற்று தந்த பாடம்  கரோனா என்பது ஒரு சாதாரண கிருமி தானே என்ற மனிதரின் அலட்சியத்தை இயற்கை ஒரு சின்ன உயிரி கொண்டு தனது பேராற்ற்லை வெளிப்படுத்தியுள்ளது. “ இயற்கைக்கு திரும்பும் பாதை ” என்று மனித இனத்தை இயற்கை நோக்கி திருப்ப வேளாண் விஞ்ஞானிகள் நம்மாழ்வார் அய்யா, ஜப்பானிய மசானபு அய்யா மற்றும் வள்ளலார், வேதாத்ரி மகரிஷி போன்ற மெய்ஞானியர் கொடுத்த அறைகூவலுக்கு செவிமடுத்து இயற்கை என்னும் பேராற்றல் மிகச் சிறிய உருவங்கொண்டு யானையையே அடக்கிவிட்ட இறுமாப்புடன் சுற்றி வந்த மனித இனத்தை வீட்டை விட்டே வெளி வராமல் முடக்கி, இறந்த உறவினரை காணக் கூட முடியாமல் மனிதன் வந்த சுவடே தெரியாமல் அழிக்க தொடங்கியுள்ளது.   ஒரு கிருமி மனிதனை முடக்கியவுடன் இது வரை மாசு மண்டி போயிருந்த பூமி இன்று தூசு இல்லாத காற்று, சுத்தமான நீர் , விலங்கில்லாத விலங்கினங்கள் என்று அனைத்தும் மனிதனிடமிருந்து விடுதலை பெற்று மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. அதனால் மனித இனம் இதில் கற்றுக் கொண்ட பாடங்களை இயற்கைக்கு மதிப்பளித்து மீண்டும் வாழ இயற்கை கொடுத்த வரமாக ஏற்று தரமோடு வாழ்வோம். முதல் பாடம் - கிராமங்களுக்கு திரும்புவோம் இர...

Trees give birth to Buddha

Image
சித்தார்த்த புத்தன் அரச மரத்தினடி அமர்ந்த அரசனடி தருவினடி  தன்தரிசனம் கண்டானடி தருமம் பகர்ந்தானடி ஆயிரம் தலைவாங்கிய  அசோகனும் அடிக்கண்டானடி அரச மரம் வைத்தலே  அரசின் கடமை என கொண்டானடி Asoka Tree அசோக மரம்  காயாய் அலைந்தானடி கனியாய் அமர்ந்தானடி  பிறவி போதை தெளிய போதித்தருவினடி  ஜோதி உள் கண்டானடி போதித்தவன் புத்தனடி  ஆலிலை வண்ணனடி  அவன் நிறம் கொண்டேனடி  நானும் குமரனடி  குறிஞ்சி நிலத்தினிலே குன்றெங்கும் கண்டெனடி மயிலெங்கும் ஆட  குயிலெங்கும் பாட  கடம்ப வனம் கொள்வேனடி மலையெங்கும்  மரம் வளர்த்து  மேகத்தை ஈர்ப்பேனடி ஆறாய் வந்தேனடி  ஆரும் காணாத அருணணின்  உருவான  அண்ணன் மலையையும்  நனைப்பேனடி அவன் அடி நினைப்பேனடி  Trees give Birth to Buddhas  When the King of Nepal was wandering in wilderness in search of the ultimate truth.  He finally sits down under a bodhi tree.  The knowledge , the conscio...

Worship thy Nature இயற்கையை கொண்டாடுவோம்

Image
மலை மரம் மழை முருகன் ஓளியில் பிறந்தவனே ஒலியை ஓதியவனே ஆறாகி வா ஆராதிக்கவா https://www.pillaicenter.com/blog/muruga-warrior-of-victory/ ஆறுமுகம் கொண்டவனை மலை ஏறுமுகம் கண்டேன் குன்று தோறும் தளிர் மரமாய் நின்றிருக்கும் அழகா பாது குகை மலேசியா Batu Caves Malaysia பாலையில் ஆவியாகி பால்வெளியில் மேகமாகி குன்றின் உச்சியில் மரமாகி குளிர்வித்த குமரா குறிஞ்சியில் ஒடையாகி மருதத்தில் ஆறாகி முல்லையில் பயிராகி நெய்தலில் ஏரியாகி பன்முகம் காட்டும் கந்தா shanmuga river dam ஷண்முக நதி அணை  திருமலையிலும் உன் வாசம் திருவண்ணாமலையும் உன் திருப்புகழ் பேசும் அருணையே உன் உருவம் கருணையே நின் வடிவம் அரக்க குணம் கொண்டவனும் மரமாகி நின்றதால் இரக்க குணம் கொண்டு ஆட்கொண்ட பரம்பொருளே குன்றெங்கும் குடிக்கொண்டாய் குறத்தியையே மணங்கண்டாய் குன்றை தொழுதவனேயே குணமாக்குகின்றாய் ஆரை தொழுவதென்று அறியாமல் அலைகின்றோம் ஆறையே தொழ ஆறுமுகம் ஆனாயோ குறத்தி கரம் பற்ற ஆனையான உன் அண்ணன் அண்ணன் மலையிலும் அடைபட்ட காவிரியை க...