Worship thy Nature இயற்கையை கொண்டாடுவோம்



மலை மரம் மழை முருகன்

ஓளியில் பிறந்தவனே
ஒலியை ஓதியவனே
ஆறாகி வா
ஆராதிக்கவா



https://www.pillaicenter.com/blog/muruga-warrior-of-victory/
ஆறுமுகம் கொண்டவனை
மலை ஏறுமுகம் கண்டேன்
குன்று தோறும் தளிர் மரமாய்
நின்றிருக்கும் அழகா

பாது குகை மலேசியா Batu Caves Malaysia


பாலையில் ஆவியாகி
பால்வெளியில் மேகமாகி
குன்றின் உச்சியில் மரமாகி
குளிர்வித்த குமரா
குறிஞ்சியில் ஒடையாகி
மருதத்தில் ஆறாகி
முல்லையில் பயிராகி
நெய்தலில் ஏரியாகி
பன்முகம் காட்டும் கந்தா

File:Shanmuganathi Dam.jpg
shanmuga river dam ஷண்முக நதி அணை 

திருமலையிலும் உன் வாசம்
திருவண்ணாமலையும் உன் திருப்புகழ் பேசும்
அருணையே உன் உருவம்
கருணையே நின் வடிவம்

அரக்க குணம் கொண்டவனும்
மரமாகி நின்றதால்
இரக்க குணம் கொண்டு
ஆட்கொண்ட பரம்பொருளே

குன்றெங்கும் குடிக்கொண்டாய்
குறத்தியையே மணங்கண்டாய்
குன்றை தொழுதவனேயே
குணமாக்குகின்றாய்

ஆரை தொழுவதென்று
அறியாமல் அலைகின்றோம்
ஆறையே தொழ
ஆறுமுகம் ஆனாயோ

குறத்தி கரம் பற்ற
ஆனையான உன் அண்ணன்
அண்ணன் மலையிலும்
அடைபட்ட காவிரியை
கடைவிரிக்க காகமாய்
வரச்சொல்லேன்

பித்தனான நின் தகப்பன்
தலை சூடும் தணியட்டும்
தணிகைமலை வாசா
வாதநாராயணனை வளர்த்து
கபம் நீக்குவோம்
கங்கை கொண்டவனுக்கு

மலையெங்கும மரம் வைத்து
மரம் அனைத்திலும் கனி வைத்து
வானரங்கள் வண்டினங்கள்
கானகத்தில் கானமிசைக்க
கனவுக் கொண்டேன்
திருதம்பிமலை வாசன்

அருட்பெருஞ் ஜோதியே
தனிப்பெருங்கருணையால்
வள்ளல் ஆறாய்
வந்திடப்பா


தரு ஓங்க
தருமம் ஓங்கும்
பொறுப்பு மிகும்
பொறுப்புள்ள குடிமக்கள்
தழைப்பர்



முற்கால தமிழர்கள் இயற்கையை மிகவும் உணர்ந்து அதனுடன் இயைந்து வாழ்ந்து வந்தனர்.  இயற்கையின் பேராற்றலை அனைவருக்கும் உணர்த்த இறைவன் என்றொரு வடிவம் தந்து இயற்கை மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சியில் மேம்பட போற்றி வாழ்ந்தனர்.

நிலங்களை குறிஞ்சி , மருதம், முல்லை , நெய்தல் , பாலை  என்று ஐந்து வகையாய் பிரித்தனர் . மலையும் , மலை  சார்ந்த  இடங்களையும் "குறிஞ்சி" என்று  குறிப்பிட்டனர் . குறிஞ்சி நில கடவுளாக முருகன் என்று குறித்து  அவருக்கு " ஆறுமுகம்" என்று  குறிப்பிட்டனர்.  "குன்று இருக்கும்  இடமெல்லாம் குமரனின் கோட்டம்" என்று வழிப்பட்டனர்.  இதில்  நாம்  உணரவேண்டியது , உலகில் அநேக  ஆறுகள்  மலைகளில்  தான்  உற்பத்தி  ஆகின்றன.  அதனால்  ஒவ்வொரு  குன்றும் " ஆறுகளின்" முகமே  ஆகும்.  மனிதர்களுக்கு  புரிய  வேண்டும் என்பதற்காக மலை என்னும் இயற்கையின்  பெரு  வடிவத்தின் ஆற்றலை  மனிதன்  உணர  வேண்டும்  என்பதற்காக அந்த  ஆற்றலுக்கு  ஒரு  வடிவம் அளித்து நாம் இரண்டு கைகளை கொண்டு  இவ்வளவு செய்ய முடிந்தால்  அந்த இயற்கையின் பேராற்றல் 12 கைகள்  கொண்டது போல்  மிகப்  பெரியது , அதற்கு  ஆறுமுகம் என்று  பெயரிட்டு அந்த ஆற்றலின்  அளவீடாக  குறித்துள்ளனர் . அந்த கடவுளின்  வடிவத்திற்கு " ஆறின் முகம்" என்பதால் "ஆறு  முகம்" என்றும்  குறிப்பிட்டுள்ளனர். இதனையே கிருஷ்ண  அவதார  கதையாக  பதியும்  போதும் "மலையையே" அனைவரும்  உன்னதமாக  போற்றி  வணங்க  வேண்டும் என்பதை ஆழமாக பதிந்துள்ளனர்.

( இது குறித்த பதிவையும் படியுங்கள்  https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/08/krishna-janmashtami-nature-protection.html )

இந்த  கருத்தினையே பாடல்  வடிவில்  தந்தால் மிக  எளிதாக விளங்கும் என்றும் தந்துள்ளோம் .  நமக்கு  எல்லா வளங்களையும்  இந்த  பூமியில் தரவல்லது  "ஓடும் ஆறுகளே" அதனாலேயே  ஆறுகளை  " வள்ளல் ஆறு " என்றும் குறிப்பிட்டுள்ளோம் . வள்ளலார் , என்ற பெயரில் உருவமாய்  வாழ்ந்த , ஒளியாய் வாழ்கின்ற இயற்கையின்  பேராற்றலை  உணர்ந்து  அருள் நெறி  பரப்பிய மெய் ஞானியாரும் இயற்கையின் , பிரபஞ்சத்தின் பேராற்றலை "அருட்பெருஞ்ஜோதி" என்றும்  குறிப்பிடுகிறார் "வாடிய  பயிரை கண்டபோதெல்லாம் வாடி" அனைவருக்கும் உணவளித்த  வள்ளல் இராமலிங்க அடிகளார் ( 5 October 1823 – 30 January 1874 )

( ஆறுகளை பற்றிய நமது பதிவையும் இங்கு  படிக்கவும் https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2020/12/responsible-rivers.html )
 

இன்றைய நகரமயமாக்கப்பட்ட உலகில் பெருபான்மையான மனிதர்களுக்கு இயற்கையுடன் தொடர்பு குறைந்து கொண்டே வருகிறது.  இதனால் மனிதருக்கும் இயற்கைக்கும் ஆன இடைவெளி அதிகமாகிறது. இந்த இடைவெளியை குறைக்க மனிதனிடமிருந்து இயற்கை வளங்களை காப்பாற்ற இயற்கையை பற்றிய புரிதல் அவசியமாகிறது.  நமது முன்னோர்கள் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் தெளிவாக உணர்ந்து வாழ்ந்தனர். ஆனால் நாம் இன்று நாகரிகம் என்ற பெயரால் காடுகளுடன் இணைந்து காடுகளை வளர்த்து இயற்கையை போற்றி வாழ்ந்த ஒரு மனித இனத்தை, மனித தன்மையை நாம் தரை இறக்கி அந்த மனிதர்களும் இன்று தண்ணீர் விட்டு வெளி வந்த மீன் போல் தவித்து இயற்கை வாழ்வியலை தொலைத்து நகர வாழ்க்கையில் சிக்கி தவிக்கின்றனர்.

இதனால் நாம் மலைகளை எல்லாம் உலோகங்களாக மாற்றி மரங்களை வெட்டி வான் மழையை உருவாக்க வழி தெரியாமல் தவித்து வருகிறோம்.  இயற்கையின் அற்புத வெளிபாடுகளான மலைகளையும் மரங்களையும் மீண்டும் போற்றி வாழும் ஒரு பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்கி அதன் மூலம் மழை மேகங்களை பெருக்கி ஆறுகளை மீண்டும் ஓட வைத்து ஒரு வளமான எதிர்காலத்தை உருவாக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது.

மலை என்னும் அசைவில்லா உருவில் மரம் என்னும்  இலைகளின் அசைவு கொண்ட ஒரு உருவம் வாழ்ந்தால் ஆறு  - நீர் என்னும் ஓடு பொருள்  உருவாகும் என்பதே  இயற்கை நமக்கு  உணர்த்தும்  பாடம். அதையே நாம்  மலை, மரம் , மழை என்று  குறிப்பிடுகிறோம். 



Palani
Ancient Tamizhs have classified lands in to five classifications - Kurinji , Marudam,  mullai,  Neithal & Paalai.

For every kind of Land,  the people had different way of living based on the availability of natural resources.  For every landscape they had different forms of worship. For Kurinji - Hill based landscape  - they worshipped Lord Muruga a. k.a Aarumugam, which literally translates into Six Face.  But the word "aaru" has another meaning as "River " & the word "mugam" which means FACE in general, here means mouth or originating point.
The Six Face Muruga Temple in Shrungagiri Hill, ஆறு முகம் கோவில் 


In the above poem,  we have handled the word Aarumugam as a River Originating point.

A river starts with condensation of water vapor (cloud) in to water. In the process cloud creates light,  thunder storm (sound)  to down pour as rain . Lord muruga as per ancient texts referred as born from light & he preaches the earth humming sound as the origin point of all live forms (A. U. M).

At Responsible Citizens iyakkam,  we are undertaking the "Trees on Every Hills" project to plant more trees on hills top to create cooler ambience to attract clouds to condense as rivulets to gather moss to become a river.

A Non moving entity (Hill), if it could hold a moving entity ( leaves of the trees ) could generate a flowing entity (River ) which we are representing in our project symbol as Rain, River, Rejuvenation & Responsibility.



Comments


  1. கவிதை வடிவில் சொல்லப்பட்ட அற்புதமான செய்தி. உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்
    கிருஷ்ணகுமார் அவர்களே


    Wonderful message conveyed in a poetic form. we are Proud of you Krishna ji

    ReplyDelete
    Replies
    1. Nature described as it is. Thank you for your valuable comments about the Post.

      Delete

  2. திரு ம லை (ரம்) (ழை) என்கின்ற
    திரு தம்பிமலை வாசனுக்கு...வணக்கங்கள்.

    தங்களின் படைப்பு மிக அருமை...

    ReplyDelete
    Replies
    1. திரு தம்பி மலையிலும் திரு அண்ணா மலையிலும் ஆறுகள் ஓடும் அளவிற்கு அடர்ந்த காடுகள் வளர வேண்டும்

      Delete
  3. மிகவும் அருமை.

    ReplyDelete
  4. நீரோடு நீரும் வாழ்க நீர் வாழ நீவிர் வாழ்வது அவசியம்

    ReplyDelete
    Replies
    1. நீவிரை வாழ்த்திய நீரும் வாழ்க

      Delete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students