Parvatha Malai Greening Efforts
பர்வதமலையில் மரம் நடவு
Parvatha Malai Greening
efforts
திருவண்ணாமலை
மாவட்டத்தில் அண்ணாமலைக்கு அடுத்து பிரபலமான ஆன்மீக சிவத் தலம் பர்வதமலை. அண்ணாமலையாரை
காட்டிலும் உயரமான மலை. மலையின் உச்சியில் உள்ள சிவன் கோவில் ஏறுவதற்கு கடப்பாரையை
பிடித்து கொண்டு ஏறுவது மிகப் பிரபலம் மற்றும் மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய ஒரு
யாத்திரை.
In
Thiruvannamalai district in Tamilnadu, Parvathamalai is the second most famous
hill shrine after the Thiruvannamalai hill & Shrine. Parvatha Malai is very famous for its hill
top shrine located on top of a steep rock.
ஆனால் இந்த
மலையின் உச்சியின் பெரும் பகுதி வெறும் கற்பாறைகள் தான். மரங்களே இல்லாமல் வெப்பம் நம்மை வாட்டும் அளவிற்கு
நிழல் இல்லாத வறண்ட பாறைகள்.
The top of
the hill is a dry rock, it radiates heat under the hot sun without much shade.
இதனால் இந்த
மலையில் வசிக்கும் விலங்குகள் கோடை காலங்களில் தண்ணீர் இன்றி வாடும் நிலைமை பற்றி பர்வதமலை
பாதுகாப்பு குழுவின் மூலமாக நமது இயக்கத்திற்கு தகவல் கிடைத்தது.
During
summer, most of the animals living in this hill suffer due to water scarcity is
the point drawn us to this hill through the Parvathamalai protection team.
Parvathamalai
protection team’s Mr. Satish, Mr. Kumaran, Mr, Manjunath, Mr. Subramanian, Mr.
Palanisami, Mr. Balaji , Mr. Dinakaran along with school students Mr. Maran,
Mr, Kiran & Mr. Sunil helped us in digging the pits & planting the
trees. From Chennai, our iyakkam’s advisor Mr. Prakash & his Mr. Friend Mr. Ramesh joined us on 1st
Nov 2020 during digging the pits. Swamiji living in the cave gave all of us good
quality food to our hungry stomachs after the activities.
7 நவம்பர்
2020 அன்று மாதுளம்பாடி அரசு பள்ளி ஆசிரியரின் சீரிய முன்னெடுப்பில் அவர் வாங்கி வந்த
மரக் கன்றுகளை குழிகள் நட்டு ஓடையில் போகும் தண்ணீரை எடுத்து வந்து விட்டு பருவதமலையை
பசுமையாக்கும் பணியை துவக்கிவிட்டோம். நட்ட
மரங்களின் மீது காய்கறிக்களுக்கான ஜல்லடை பைகள் வாங்கி வந்து மரங்கள் மீது ஆடு- மாடுகள்
கடிக்கா வண்ணம் போட்டு விட்டோம். மேலும் இந்த பைகள் பனிக் காலங்களில் பனியை நீராக்கி
செடிகளுக்கு தண்ணீர் வார்க்கும்.
![]() |
| Fetching water from rivulet to water the Plants This Picture Highlights the water scarcity in the hills. |
![]() |
| A small rivulet coming through the rocks |
இது ஒரு சிறு
துவக்கம் தான். இந்த மலையின் கிரிவலப் பாதை கிட்டத்தட்ட 26 கிமீ நீள்கிறது. இதன் சுற்றுபுறத்தில்
உள்ள 20 கிராமத்தின் மக்களும் இந்த பசுமை பணியில் ஈடுபட்டால் இந்த மலையை ஒரே ஆண்டிற்குள்
பசுமையாக்கிவிடலாம். அதுவும் தவிர திருவண்ணாமலை
மாவட்டத்தில் அடிக்கடி நடக்கும் மலைகளில் வளரும் மஞ்சாம் புற்களுக்காக மலையில் தீ முட்டும்
செயல்கள் இல்லாமல் போனால், இந்த அற்புத ஆன்மீக மலை இங்குள்ள கிராமங்களுக்கு வற்றாத
தண்ணீர் கொடுக்க வல்லது.
This is a
small but a significant beginning. The circumbulating (Giri Valam ) path of the
hill is about 26 Kms. If all the people
living in around this path in 20 odd villages come together this hill can be
completely greened. Another important safe guarding activity is to protect the
hills from Man made fires for harvesting the Lemon grass growing on the hills.
Then this hill can give plenty of water to all the villages around through its
rivulets.
இது போல் பல
கிராமங்களில் தங்களுக்கு மலைகள் இறைவன் என்னும் இயற்கை கொடுத்த வரமாகத்தான் எடுத்து
மலைகளுக்கு பசுமை போர்வை அளித்து கிராமத்தினரின்-விவசாயிகளின் வாழ்வில் பசுமையை கூட்ட
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயற்சித்து வருகிறது.
Responsible
citizens iYakkam is making sincere efforts in creating awareness and motivation
to villagers to treat the hills as the Nature ( God ) given gift & if we
could maintain each one of them with tall rain catching forests, it will bring
a big change in the whole scenario.
நீர் உயர நெல்
உயரும் அதனால் கலைகள் வளரும் மக்களின் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சி பெருகும் , மரங்கள்
பெருக பெருக அமைதி பரவும் ஒரு பொறுப்புள்ள சமுதாயம் அமையும் என்ற முனைப்பினால் தான்
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் “மலைகள் தோறும் மரங்கள்” திட்டத்தை பல கிராமங்களில்
முக்கியமாக சிறுவர்களின் மனதில் விதை போட்டு வருகிறோம்.
“Trees on
Every Hill “Project is not just for bringing water, it is for rejuvenating
culture with various art forms, when plenty of water is available for
agriculture, with that people get prosperity and then peace will pervade in
every part of the country.
மாணவர்களின்
உற்சாகத்தை கண்டு நமது எதிர்காலம் மிகவும் பசுமையாக இருக்கும் என்று திடமாக நம்புகிறோம்.
சினிமா நாயகர்கள் அரசியல் தலைவர்கள், விளையாட்டு
பிரபலங்கள் இவர்களின் எண்ணற்ற ரசிகர்கள், தொண்டர்கள் அனைவரையும் அவர்களின் அபிமான்
ஹீரோக்களை கொண்டாட கூட மரம் நட்டு கொண்டாட சொல்லி அழைக்கிறோம். பிறப்பு முதல் இறப்பு பரை அனைத்திற்கும் மரம் நட்டு நமது உலகத்தை
பசுமையாக்குவோம்.
From our
interactions, we strongly believe the future is going to be very green &
prosperous due to enthusiasm we observe in Young school children during our
programmes. We encourage the youths to
celebrate their cinema heroes, cricket heroes, politicians by planting more
& more trees in every part of the village, mainly in all hills. From birth
to death every incident in life to be celebrated by planting trees.
வாழ்க மரங்களுடன்.
“மரமே மிகப் பொறுப்புள்ள உயிரினம்” என்பது
நமது இயக்கத்தின் தாரக மந்திரமாகும். மரங்கள் தங்களுக்காக மட்டும் மற்ற உயிரினங்களுக்காகவும்
வாழும் ஒரு உன்னத உயிரினம்.
“Tree the
responsible Being” is our slogan, here “tree” word used as a verb like “plant”
to grow a responsible society by planting more trees, as Trees doesn’t live for themselves it gives
lives to many other beings.




















மிகப்பெரிய மிகச்சிறந்த முயற்சி .
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவாழ்த்துக்கள், தோழர்களே.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவாழ்த்துக்கள் ..
ReplyDeleteGood efforts.will join
ReplyDeleteMost welcome to join our efforts. Please send in your details and address for us to contact you when we are doing our work in your area of interest
Deleteநன்றி நன்றி.... ஜி
ReplyDeleteஉங்கள் உதவியால் தான் இது சாத்தியமாயிற்று. பர்வதமலையை முழுவதுமாக பசுமையாக்க சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பசுமை முயற்சியில் நாம் பங்கௌ பெற செய்ய வேண்டும்.
Deleteமிக்க நன்றி
ReplyDelete