Ma Ra MaNam

 அண்ணாமலையில் 
ர மணம் 
வீசட்டும்



திருவண்ணாமலை காந்தமாய் பலரையும் ஈர்த்த ஈர்கின்ற ஒரு ஊர், திருத்தலம். திருவண்ணாமலை , இயற்கையின் ஐந்து வித வெளிபாடுகளில் தீ யின் உருவாக்கமாய் , பஞ்சபூத தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.  

சைவ நெறியோரையும் தாண்டி உலகத்தில் ஏகாந்தத்தை விரும்பும் பலரையும் ஒன்றாக குவிய காரணமாய் இருக்கும் ரமண மகரிஷி, உலகத்தின் மலைகளுக்கெல்லாம் மூத்த "திரு அண்ணன்" மலையின் மகத்துவத்தை உலகம் முழுவதும் உணர பரவ மலையே எடுத்த அவதாரமாகவே பார்க்கப்படுபவர். 

அருணாசலம் என்கிற அசையா நெருப்பின் தாக்கம் மலையின் அருகே இருக்கும் அனைவரையும் தாக்குகிறது. மரங்களில்லாமல் இந்த அருணாசலம் வெறுமையாக இருப்பதை பிரதிபலிக்கவே திரு இரமண பகவான் வெறும் கோவணம் மட்டுமே உடுத்தி "தன்"னிலையை வெளிப்படுத்தியதாக நாம் கருத வேண்டியுள்ளது. 



அண்ணாமலையார் திருக் கோயிலின் தல விருட்சமாக (மரமாக) இருப்பது மகிழ மரம். அதாவது இந்தக் கோவில் மகிழ மரக்காட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   அருணாசலேசுவரர் உள்ளம் குளிர வேண்டு மென்றால் அவர் "மகிழ" அண்ணாமலையெங்கும் மகிழ மரக் காடாய் மாற வேண்டும், "சோணை" ஆறு மீண்டும் உயிர்தெழுந்து சிவன் தலை கங்கையாக ஓடி மகிழ வேண்டும்.  புள்ளி மான்களும் புலிகளும் இங்கு வரப் போகும் மழைக் காட்டினில் நட்புடன் "கிரிவலம்" வரவேண்டும்.

இது சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம் என்கிறார் தனி ஒருவனாக 40 ஆண்டுகளில் பிரம்மபுத்திரா நதியினால் வெறும் மணத்திட்டான ஒரு தீவினை ஆயிரம் ஏக்கர் புலிகள் யானைகள் காட்டின் பல்லுயிர்களை மீட்டெடுத்துள்ள அசோமின் திரு ஜாதவ் பயேங்க். 




அண்ணாமலையிலும் பல ஆண்டுகளாக இரமண ஆசிரமம், The Forest Way , Annamalai Reforestation Society, மருதம் பள்ளி , வனத்துறை மற்றும் பல தன்னார்வலர்கள் இந்த மலையின் பல பகுதிகளையும் இங்கு அடிவாரத்தில் ஒரு நாற்று பண்ணையை உருவாக்கி பல ஆண்டுகளாக பசுமையாக்கி வருகின்றனர்.  இப்பொழுது பொது மக்கள் பலரும் இந்த மலையின் மகிமையினால் ஈர்க்கப்பட்டு கிரிவலம் செய்ய நாட்டின பல இடங்களிலிருந்தும் வந்து செல்கின்றனர். இதில் இந்த காட்டினை மீட்டுருவாக்க பொறுப்புள்ள குடிமக்கள் பலரும் பொறுப்பாக இணைந்தால் அண்ணாமலை காடும், சோணை ஆறும் மீண்டும் உயிர் பெற்று நாடு வளம் பெறும், எங்கும் மர மணம் கமழும், பல்லுயிர் பெருகும். 



Comments

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students