திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது

 திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது 

கடந்த ஜூன் 2021 ல் நமது பொறுப்புள்ள குடிமக்கள்  இயக்கத்தின் இணையதளத்தில் நாம்  மேல்பாச்சார் - மோதக்கல் சாலையில்  உள்ள பெருமாள் அப்பன்  கோவில் மலையில் மர கன்றுகள் நட போவதை பற்றிய  திட்டத்தை https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/06/hill-tree-rain-tiruvannamalai.html இந்த பதிவில் விரிவாக பதிவு செய்திருந்தோம்.


இதனை  நனவுபடுத்த நமது  இயக்கத்தின் சார்பாக நேரிலும்  தபால் மூலமாகவும் அலைபேசி  வாயிலாகவும் பல  முறை  உதவி திட்ட  இயக்குனர் (ஊரக  வளர்ச்சி )  திரு. லட்சுமி நரசிம்மன்  , ஊரக வளர்ச்சி அலுவலர்கள் திரு. . அமிர்த ராஜ்  ஆகியோரை  சந்தித்து இந்த மலையில் அடர்த்தியாக மரங்கள் நட்டு மலையை பராமரிக்க வேண்டியதன்  அவசியத்தை மேல்பாச்சார் கிராம ஊராட்சி நிர்வாகத்தின்  வாயிலாகவும் முயற்சித்தோம்.




இதற்கு நடுவில் இந்த  பகுதியில்  தொழிற் பேட்டை துவங்குவதற்கு நிலங்கள் கையகப்படுத்த போவதாக தகவல்கள் வந்த  வண்ணம் இருந்தன. கிராம நிர்வாகம், மக்கள் , இளைஞர்கள் அனைவரும்  விரும்பிய  வண்ணம் இப்போது இந்த  மலையில் முதற்கட்டமாக ஒரு 25 ஏக்கரில் பழ மரங்களின் தோட்டம்  உருவாக்க  மாவட்ட  நிர்வாகம்  ஊரக  வளர்ச்சி முகமை , மேல்பாச்சார் ஊராட்சி மரங்கள்  நட்டு பராமரிக்க  ஆரம்பித்துள்ளது.


இது வரை பல மர கன்றுகள்  நம்  இளைஞர்களால் பலமுறை  நடப்பட்டும் , இங்கு  பரவலாக  ஆடு மாடுகள்  இந்த குன்றின் மீது மேய்க்க படுவதால் மர கன்றுகளை  காப்பாற்றுவது மிக  சிரமமாக  இருந்தது .

மேல்பாச்சார் கிராம தலைவர்  திரு. துர்கா ராமன் இங்கு  100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக  கிராம மக்கள் அதிலும் மூத்த குடிமக்களை கொண்டே  கிராம வருங்கால குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக நாவல் , கொய்யா , பலா மரங்களை  நட்டு , அவற்றிற்கு முள் வேலிகள் போட்டு , தண்ணீர்  விடவும்  ஏற்பாடுகள்  செய்துள்ளார். இதனை  மாநில , மத்திய  நிர்வாக  அதிகாரிகளும்  வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.


இதன்  மூலம் இந்த மலை பசுமையாக மாறுவதற்கான வாய்ப்புகள்  பிரகாசமாக தெரிகிறது. இதனை  போல்  திருவண்ணாமலை  மாவட்டத்தில்  உள்ள  அனைத்து மலைகளிலும் மரங்கள்  கிராம மக்களின்  ஒத்துழைப்போடு நடைமுறைபடுத்த  மத்திய  மாநில  நிர்வாகங்களிடம் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்  மனு அளித்துள்ளது . இதே போல் மலைகள்  இருக்கும் ஒவ்வொரு கிராம நிர்வாகிகளிடமும் மக்களிடமும்  நமது  இயக்கம்  விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி  வருகிறது .

நல்ல  எண்ணங்கள் விதைக்க அது  நற்செயல்களாக வளர்ந்து மலைகள்  தோறும் மரங்கள்  நட்டு ஆறுகளை மீட்டு வளமோடு  வாழ்வோம்.

Comments

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students