Let us bottle that Plastic demon ப்ளாஸ்டிக் பூதத்தை பாட்டிலில் அடைப்போம்

 



கடந்த மாதம் வந்த வெள்ளத்தில் சென்னையின் பல தெருக்களில் தண்ணீர் அதிகம் தேங்கியதற்கு ப்ளாஸ்டிக் (நெகிழி ) கவர்களும் மிக முக்கிய காரணம். குடிமக்கள் பலரும் இன்னமும் கடைகளில் மெல்லிய பிளாஸ்டிக் கவர்களில் பொருட்களை வாங்கி வந்து விட்டு கவர்களை சாலைகளில் விட்டெடிருந்து விட்டு செல்கிறார்கள். இதனால் தண்ணீர் போக வேண்டிய மழை  நீர் வடிகால் கால்வாய்கள் பலவும் அடைத்து கொண்டு சிறு மழைக்கு கூட சாலைகளில் தண்ணீர் தேங்கும் நிலைக்கு தள்ளி விடுகிறது.


வீசப்படும் கவர்களை எரித்தும் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இந்த கவர்கள் தண்ணீரிலும் அடித்து செல்லப்பட்டு கடல் வரைக்கும் சென்று கடல் வாழ் உயிரினங்களும் ப்ளாஸ்டிக்கை முழுங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இதனால் பொறுப்புள்ள குடிமக்களாக இந்த சுழ்நிலைக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தித்த போது நமது பயனுறு சூழல் அமைப்பின், வட தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு ஜவஹர் கிருஷ்ணன் - "பசுமையான வீடு" முறைப்படி ஒவ்வொரு வீடும் எப்படி அவர்கள் வீடுகளில் பயன்ப்டுத்தும் ப்ளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி முறைப்படி இந்த வீணான ப்ளாஸ்டிக் கவர்களை நாம் பயன்படுத்தும் 1லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் ( எண்ணை பாட்டில்கள், இதர ஒரே அளவு பாட்டில்கள் ) ஒரு குச்சிக் கொண்டு நல்ல அழுத்தமாக உள்ளே அழுத்தி ஒவ்வொரு பாட்டிலையும் ஒரு எகொ ப்ரிக்காக்க வேண்டும்.

ஒரு சுத்தம் செய்த பயன்படுத்திய 1 லி, 2லி பாட்டில்களில் தினந்தோறும் சேரும் அனைத்து ப்ளாஸ்டிக் கவர்கள், பிஸ்கட், சாக்லெட், பால், கவர்களை ஒரு குச்சிக் கொண்டு பாட்டிலில் நல்ல அழுத்தமாக அடைக்கவும்.

இதை வீடியொ லிங்கிலும் காணலாம் Eco Brick - how to make

இந்த பதிவை காணும் ஒவ்வொருவரும் வரும் 14 ஜனவரி 2024 அன்று போகி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேளச்சேரியில் உள்ள ராம் நகர் முதல் தெருவில் உள்ள ஷட்டில் பாட்மின்டன் விளையாட்டு திடலுக்கு தங்கள் வீட்டிலிருந்தே செய்து கொண்டு வந்து தந்தால் அதனை 26 ஜனவரி 2024 இந்திய குடியரசு தினத்தன்று இந்த எகொ ப்ரிக்ஸை கொண்டு விளையாட்டு திடலில் பலரும் பயன்படுத்தும் வண்ணம் ஒரு இருக்கையோ அல்லது மரங்களை சுற்றி பாதுகாப்பு சுவரோ கட்டலாம்.

மக்காத பொருட்களை பொறுத்தவரை - மறு சுழற்சியே பொறுப்புணர்ச்சி என்பதை உறுதி மொழியாக ஏற்றுக் கொண்டு நமது சுற்றுச்சூழல் பாதுகாக்க அனைவரும் ஒன்று கூடுவோம்.

https://youtu.be/NBqV68kLMMU?si=d2zpP-eyn6tskG3O எகோ ப்ரிக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று இந்த வீடியோவில் விளக்கப்படுகிறது.

குறிப்பு :அனைவரும் ஒரே அளவாக பிஸ்லரி ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் மற்றும் அதே அளவுள்ள இதர பாட்டில்களை மட்டுமே பயன்படுத்தினால் நாம் கட்ட இருக்கும் கட்டமைப்பு கட்ட கொத்தனாருக்கு எளிமையாக இருக்கும்.

இதில் பங்கேற்க நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பவர்கள் Program Coordinators

1. திரு . சுரேஷ் ( 9360684714 ), ராம் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் ஷட்டில் பாட்மின்டன் விளையாட்டு குழு 

2. திரு. ஜவஹர் கிருஷ்ணன் (9790909054 ), பயனுறு சூழல், வட தமிழ்நாடு, 

3. திரு. ச.கிருஷ்ண குமார் (996266 7819) , , பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்


பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்

Responsible Citizens iYakkam 2024

Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai