Ramana Maharishi Nammazhwar
இந்த மாபெரும் பிரபஞ்சம் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உயர் பிரபஞ்ச ஞான நிலையை அடைய பல்வேறு வழிக்காட்டிகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறது. இந்த உலகில் பல்வேறு உயிரினங்களும் ஆனந்த நிலையில் வாழ சதா முயன்று வருகின்றன. அதற்கு ஒவ்வொரு உயிருக்கும் பல சூழ்நிலைகளில் வழிக் காட்ட சில வழிக் காட்டி உயிரினங்களை இயற்கை அனுப்பி கொண்டிருக்கிறது. டிசம்பருடன் தொடர்புடைய இரண்டு மாபெரும் வழிக்காட்டிகளை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் போற்றி பணிகிறது. மண்ணை நெகிழ வைக்கும் விஞ்ஞானத்தை அன்புடன் ஊட்டி அதன் மெய் ஞானத்தை உலகோர்க்கு வழிக்காட்டியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. அவர் மண்ணில் விதையாகி ( 30/31-12-2013 ) இன்றோடு 8 ஆண்டுகள் ஆகின்றது. மனதை நெகிழச்செய்து இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் மாறா அன்பை வாழ்ந்து காட்டி வழிக் காட்டியவர் இரமண மகரிஷி. விவசாயமும் ஆன்மீகமும் இரண்டு வெவ்வேறு பாதைகள் போல் தோன்றினாலும் விவசாயமும் ஒரு மெய் ஞான அனுபவமே. திரு இரமண மகரிஷி போதித்த அனைத்து உயிர் ஆராதனைகளையும் தினம் தினம் தன் வயலில் நிகழ்த்தி நிகழ காண்பவர் விவசாயி. ஒவ...