VILVAM seed balls making SIVAS வில்வ விதை பந்துகள் செய்த சிவக் குழந்தைகள்

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டம் கோட்டை மலையனூர் செக்கடி கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் சிவக் குடும்பங்களை சேர்ந்த இளைய சிவனடியார்கள் சிவனுக்கு மிக உகந்த வில்வ மரத்தின் விதைகளை விதை பந்தாக்கி தந்தனர். 

The Young Sivas of Saivite families of Kasi Viswanathar Temple in Kottai Malayanur Chekkadi Village in Thandrampattu Block, Tiruvannamalai District made seed balls with Vilvam seeds, which is the most auspcious tree in saivite tradition.
தங்களின் பிஞ்சு பாதங்களினால் செம்மண் மற்றும் தொழு உரத்தின் கலவையை மிதித்து மண்ணை செம்மையாக்கினர். சிறுவர்களின் உற்சாகம் அங்கிருந்த பெரியவர்களையும் தொற்றிக் கொண்டது. புவி வெப்பமயமாதலை தடுக்க இந்த புதல்விகள் மண்ணில் தங்கள் சக்தியினால் உரமேற்றினர்.  With their tender feet, the kids stamped the red soil with cow dung and mixed them thoroughly. The enthusiasm has to be seen to be believed. Their young energy duly earthed with this soil.
வட்டமாய் அமர்ந்து விதை பந்துகளை உருவாக்கினர். மரங்களுக்கு இடையே அமர்ந்து மர நிழல்கள் காடெங்கும் பரவ தங்கள் இளம் வயதிலேயே முயன்றனர். Seated in round robins they made the seed balls. seated in the shades of the huge banyan tree, they made their best efforts to bring shades in their nearby forests.

கிராமத்து சிறுவர்களுக்கு மண்ணை தொடுவதிலோ சாணத்தை முகர்வதிலும் எந்த தயக்கமும் இல்லை. இந்த் சிறுவர்களின் இயற்கை மீது உள்ள பாசத்தை கண்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் இளைஞர் திரு. மகேந்திரனும் சிறுவர்களுடன் ஒன்றிணைந்து திருப்பணி செய்தார்.

Being village children , they never hesitated to touch the soil or manure and made the seed balls as a joyful activity. Even an IT company employee & Environmental Enthusiast Mr. Mahendran coordinated with the kids to unwind himself to become a Child in this natural activity.


பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் இந்த நிகழ்வை தானிப்பாடி சரக வனத்துறை வழங்கியிருந்த வில்வ மர விதைகளை கொண்டு விதை பந்துகள் செய்வதை 11.6.2023 அன்று ஞாயிற்று கிழமை  ஏற்பாடு செய்திருந்தோம்.
Thanipadi Forest Ranger Mr. Palanivel gave us the Vilvam seeds and with that Responsible Citizems iYakkam organisaed this activity on 11th June 2023 at the temple premises.
சிறுவர்கள் தாங்கள் செய்த விதை பந்துகளை கொண்டே தங்கள் மனத்துக்கு ப்ரியமான சிவபெருமானை செய்து விதை பந்துகளை மர நிழலில் காயவும் வைத்தனர். பெரியவர்கள் எந்த தூண்டுதலும் இல்லாமல் சிறுவர்களின் இந்த உற்சாகமான படைபாற்றல் இந்த கிராமத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கப்போவதை முன்னறிவித்தது. விதைக்குள் ஒளிந்திருக்கும் ஜீவனான சிவனை இந்த கிராமத்தின் தென்பெண்ணை ஆற்றின் காட்டருகே எங்கும் நிறைக்க முயற்சி மேற்கொண்டனர். 
Children out of Sheer enthusiasm and love for Lord Siva, expressed themselves by drawing Siva in many forms with the seed balls itself while drying the seed balls in tree shades. Without any influence from elders, children are able to be more involved in greening activity ensures a great future for this children and the village. The real life force residing in the seeds shall manifest in to big trees by saving the future of this children by themselves. That is where the real Lord Siva resides in.

சிவனை மட்டுமல்லாது தங்கள் கைவண்ணத்தை எஞ்சியிருந்த மண்ணில் பல படைப்புகளையும் செய்து மகிழ்ந்தனர் சிறுவர்கள். 

Not only Siva, they also enthusiastically made many other art forms with the remaining soil and it became not just seed filling activity but also a fun filled activity motivating the young children to take care of their Green Future. 

காந்தாரா திரைபடத்தை போல்  இது "நமது காடு நமது பொறுப்பு" என்ற பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் முயற்சி இனிதே துவங்கியது. இனி இந்த விதைகளை காட்டுக்கு விறகு எடுக்க செல்லும் அனைவரும் விதை பந்துகள் போட்டு தாங்கள் எடுக்கும் விறகுகளுக்கு ஈடாக மரங்கள் வளர்க்க வைப்பதே நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

As shown in the Movie "Kantara", " Our forest is our responsibility" shall become every village near to the forest motto from here on is Responsible Citizens iYakkam's objective. Every villager venturing in to the forest to fetch firewood shall hereafter put seed balls for every piece of log they take from the forest is everyone's responsibility.


சிறுவர்கள் தங்கள் எதிர்காலம் மிகவும் பசுமையாக இருக்க வேண்டும் என்று "சிவபுராணம்" பாடி தங்கள் இயற்கை பணியாம் இறைபணியை இனிதே துவக்கினர். 
Children prayed to the lord by chanting "Siva Puranam" for their green prosperous future and begun their spiritual journey towards nature.
வரும் வாரத்தில் கிராமத்து இளைஞர்கள் அருகில் இருக்கும் காடிற்குள் சென்று இந்த விதை பந்துகளை காட்டில் போடுவார்கள். In the coming weeks Youths of this village will be putting these seed balls in to the forests.

இது கடந்த 5ம் தேதி "உலக சுற்றுசூழல் தின"த்தன்று எங்களது பதிவின் தொடர்ச்சி :
This is in continuation to our above post on 5th of June 2023 "World Environment Day"


 பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2023
Responsible Citizens iYakkam 2023

Comments

  1. Very good motivation for greener india

    ReplyDelete
    Replies
    1. Thank you for the encouragement for the intiatives of the younger generation

      Delete
  2. Children's active participation in making the earth greener should inspire the elders to take care of the environment

    ReplyDelete
    Replies
    1. Yes Children's vibrations are enormous to make forests green again and bring prosperity

      Delete

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students